வாழ்க்கையின் அடிப்படை எவை?

பிரார்த்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்!
– புத்தர்

அமைதியை விட மேலான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை!
– அரவிந்தர்

கோபம் அன்பை அழிக்கும். கர்வம் அடக்கத்தைக் கெடுக்கும்!
– மகாவீரர்

அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை!
– வள்ளலார்.

வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.
– ஔவையார்

செல்வங்களின் சுமையை ஏற்றிக் கொண்டு இன்பம் எனும் செங்குத்துப் பாதையில் ஏறிச் செல்வது ஒரு மனிதனுக்குக் கடினம்.
– முகம்மது நபிகள்

தேவைக்கு மிஞ்சிய பொருள் வைத்திருப்பவன் பிறர் பொருளைப் பறித்தவன்.
– புனித அகஸ்தினார்

சிந்தனை இல்லாத படிப்பு, பயனில்லாத உழைப்பு, படிப்பில்லாத சிந்தனை இவை மூன்றும் ஆபத்தானவை.
– ஆண்டர்சன்

சுதந்திரமாக இரு. எவரிடமும் இருந்து எதையும் எதிர்பார்க்காதே.
- சுவாமி விவேகானந்தர்

படிப்பு என்ற மெழுகுவர்த்திக்கு ஆர்வமே திரி.
– யாரோ

மன்னிக்கும் உள்ளத்தில் கடவுள் குடியிருக்கின்றார்.
– குருநானக்

ஆற்றலைக் காட்டிலும் ஆர்வமே வெற்றிக்கு அடிப்படைக் காரணம்.
– ஒயிட்

உண்மையை நேசி, பிழையை மன்னித்துவிடு.
– வால்டேர்

வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது.
– பெர்னார்ட் ஷா

நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும். நமக்குத் தெரிந்தவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
– மூர்

வாழ்க்கையை வளமாக்க விரும்பினால் காலத்தை வீணாக்காதே. காலத்தால் செய்யப்பட்டதே வாழ்க்கை.
– ரிச்சர்ட் சாண்டர்ஸ்

அரிய சாதனைகள் வலிமையினால் அல்ல, விடாமுயற்சியால்தான் சாதிக்கப்படுகின்றன.
– சாமுவேல் ஜான்சன்

ஆரோக்கியம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.
– ஹால்டேன்

வாழ்க்கை என்பது ஒரு துணிவு மிக்க வீரச் செயல்.
– ஹெலன் கெல்லர்

சிறந்த செயல்களே சிறந்த வழிபாடு.
– குரு நானக்

வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் தேடி ஓடும் போதுதான், நாம் கால்கள் இடறி விழுந்து விடுகிறோம்.
– ஷேக்ஸ்பியர்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.