அன்னையின் அன்புக்கு வயதுண்டா?

மனிதன் நண்பர்களில்லாமல் இருக்க முடியும், ஆனால் அக்கம் பக்கத்து வீட்டார்கள் இல்லாமல் முடியாது.
- உருசியா

சேவல் தன் குப்பை மேட்டிலிருந்துதான் கூவும், கோழி ஊரெங்கும் சுற்றிக் கூவி வரும்.
- ஸ்பெயின்

சூரியன் போகாத இடத்திற்கு வைத்தியர் போகிறார்.
- இத்தாலி

இரவுச் சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் சிறிது உலாவுதல் நலம்.
- லத்தீன்

நீ வெளியில் எங்கே சுற்றினாலும், இன்பமயமான உன் வீட்டுக்கு வந்துவிடு.
- பல்கேரியா

கழுதையும் இளமையிலே அழகுதான்.
- இந்தியா

குருட்டுப் பூனை செத்த எலியைத்தான் பிடிக்கும்.
- சீனா

கயிறு கட்டாத கதிர்க்கட்டு வெறும் வைக்கோல்தான்.
- உருசியா

உறவினர் குறைந்திருத்தல் ஓர் அதிருஷ்டம்தான்.
- கிரேக்கம்

மகள் இருந்தால், தாய்க்குச் செலவு இருந்து கொண்டே யிருக்கும்.
- ஆர்மீனியா

முதலாவது செல்வம் குழந்தைகள், இரண்டாவதுதான் பணம்.
- ஆப்பிரிகா

குழந்தை பேசுவதெல்லாம் அடுப்பங்கரையில் கற்றவை.
- இங்கிலாந்து

சகோதரன் என்பவன் இயற்கையாக நமக்கு அளித்துள்ள நண்பன்.
- பிரான்ஸ்

உன் உறவினர்களே உன்னைக் கொட்டும் தேள்கள்.
- எகிப்து

அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது.
- ஜெர்மனி

குழந்தையின் விரலில் வலியிருந்தால், தாயின் இதயத்தில் வலியுண்டாகும்.
- ரஷ்யா

நோயாளியிடம் பணம் இருப்பதற்குத் தக்கபடி பிணி நீடிக்கும்.
- ஜெர்மனி

நீடித்த நோய்களுக்குப் பொறுமைதான் மருந்து.
- அயர்லந்து

அதிர்ஷ்டம் சிலருக்கே உண்டு, மரணம் எல்லோர்க்கும். உண்டு.
- டென்மார்க்

நோயைக் கொன்றாலும், ஆளைக் கொன்றாலும், வைத்தியருக்குக் கட்டணமுண்டு.
- போலந்து

வாழ வேண்டியவனுக்கு மருந்துக்குப் பஞ்சமில்லை.
- பல்கேரியா

மனிதனுக்கு மனிதன் ஓநாயாக இருக்கிறான்.
- லத்தீன்

பற்கள் விழுந்த பிறகு, நாவு மட்டும் ஆடிக் கொண்டேயிருக்கும்.
- சீனா

முதுமைக்கு அஞ்சுங்கள், அது தனியாக வருவதில்லை.
- கிரீஸ்

நேற்று, இன்று, நாளை ஆகிய மூன்று நாட்களே மனிதனின் நாட்கள்.
- பிரான்ஸ்

வாழ்வும் துயரமும் ஒன்றாகத் தோன்றியவை.
- இங்கிலாந்து

விருந்தாளியின் பார்வை கூர்மையானது.
- ஐஸ்லந்து

விருந்தினால் வைத்தியர்களுக்கு வேட்டை.
- இங்கிலாந்து

நம் வீடு இறைவனுடையது.
- செர்பியா

வெளியே விளக்கு வேண்டும், வீட்டிலே அனல் வேண்டும்.
- ஆர்மீனியா
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.