யார் புத்திசாலி?

பொறாமை எனும் உணர்வை எவன் ஒருவன் தன் மனதில் இருந்து அடியோடு களைத்து விடுகிறானோ, அவன் கால முழுவதும் மன அமைதியுடன் வாழ்வான்.
- புத்தர்

நமக்கு என்ன வேண்டும் என்று தெரியாமலே அதை அடைவதற்குப் பேயாய் அலைவது தான் அதிருப்தி.
- ஹெரல்ட்

செயலைச் செய்துவிட்டு அழுவதற்கு முன் அதைச் செய்யாமல் இருப்பது நன்று.
- மாத்யூ பிரயர்

உலகிலுள்ள அனைத்து சக்திகளிலும் அன்பே அதிக ஆற்றல் படைத்தது.
- ரிஷிகேஷ் சிவானந்தர்

வாழ்க்கை என்பது ஓர் அலை. அதன் வண்ணமும் நிறமும் மாறிக்கொண்டே இருக்கும்.
– டிஸ்ரேலி

கால் தடுமாறினால் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் நாக்கு தவறினால் மீளவே முடியாது.
- பெஞ்சமின் பிராங்க்ளின்

உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பொருள் ஈட்டுகிறோம் என்பதில் இல்லை. நாம் ஈட்டிய பொருளில் எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
- தாகூர்

நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும், உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.
- காந்தியடிகள்

இறைவனுடைய நாமம் தரித்தர முடையவனுக்குச் செல்வத்தையும், பசித்தவனுக்கு உணவையும், திக்கற்றவனுக்கு தைரியத்தையும், குருடனுக்கு ஒளியையும் அளிக்க வல்லது.
- கபீர் தாசர்

அதிர்ஷ்டம் பலருக்கு நிறையக் கொடுப்பதாக மனிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது யாருக்குமே அவர்கள் வேண்டிய அளவிற்குக் கொடுத்ததில்லை.
- ஹாரிங்டன்

தவறுகளுடன் இருப்பது தகாது; அதைவிடத் தகாதது தன்னிடம் இருக்கும் பல தவறுகளை உணராமல் இருப்பது.
– பாஸ்கல்

கர்வம் என்பது முட்டாள்களை விட்டு ஒருபோதும் எந்தச் சூழலிலும் நீங்கி இருக்காத கெட்ட குணம் ஆகும்.
- பைரன்

எந்தப் பேச்சானாலும் தீர ஆலோசனை செய்த பிறகே பேசவேண்டும்.
- மகாவீரர்

சூதாட்டத்தில் மும்முரமாக ஈடுபடுபவர்கள், பண்புடன் பணத்தையும் இழந்தே ஆக வேண்டும்.
- செஸ்டர்ஃபீல்ட்

எப்போது அமைதியாக இருக்க வேண்டுமென்று அறிந்தவன்தான் புத்திசாலி.
- யூரிபைட்ஸ்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.