உடலைக் குணப்படுத்தலாம், மனதைக் குணப்படுத்த முடியாது.
- சீனா
நோயை சொன்னால்தான், குணமாக மருந்து கிடைக்கும்.
- பிரான்ஸ்
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை மருத்துவன்.
- இந்தியா
வைத்தியர் இளமையாயிருந்தால், எப்பொழுதும் மூன்று சவக்குழிகள் தயாராயிருக்க வேண்டும்.
- ஜெர்மனி
நோயைக் கொன்றாலும், ஆளைக் கொன்றாலும், மருத்துவருக்குக் கட்டணம் உண்டு.
- போலந்து
பல வைத்தியர்கள் பார்த்தால், மரணம் நிச்சயம்தான்.
- ஸெக்
குணப்படுத்துவது கடவுள், சம்மானம் பெறுவது மருத்துவர்.
- இங்கிலாந்து
தண்டனை யடையாமல் கொல்லக்கூடியவர் மருத்துவர் ஒருவரே.
- ஹங்கேரி
ஒன்றும் தெரியாத மருத்துவன் கொலைகாரனைத் தவிர வேறில்லை.
- சீனா
ஒரு தொழிலும் தெரியாதவன் மருத்துவனாகிறான்.
- இத்தாலி
நோய்களுக்கு அஞ்சி ஓடும் பொழுது, நீங்கள் மருத்துவர் கைகளில் சிக்குகிறீர்கள்.
- லத்தீன்
மருத்துவர்கள் அதிகமானால், நோய்களும் பெருகும்.
- போர்ச்சுக்கல்
மருத்துவர்களும் நீதிபதிகளும் பயமில்லாமல் கொலை செய்கிறார்கள்.
- ரஷ்யா
ஒவ்வொரு நோய்க்கும் மருத்துவரை நாட வேண்டாம்; ஒவ்வொரு வழக்குக்கும் வழக்குரைஞரை நாட வேண்டாம்.
- ஸ்பெயின்
மருத்துவர்களில் வயதானவர், வழக்குரைஞர்களில் வாலிபர்.
- இங்கிலாந்து
ஒவ்வொரு மருத்துவரும் தம் மாத்திரைகளே உயர்ந்தவை என்று எண்ணுகிறார்.
- ஜெர்மனி
மருத்துவர் மனத்திற்கு ஆறுதலளிப்பவரேத் தவிர வேறில்லை.
- லத்தீன்
சூரியன் ஒரு போதும் வராத இடத்திற்கு மருத்துவர் அடிக்கடி வருவார்.
- ஸெக்
மருத்துவர்கள் மட்டும் பொய் சொல்ல அனுமதியுண்டு.
- பிரான்சு
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.