1. பிறரை அடக்குவதன் மூலம்தான் லாபம் தேட முடியும் என்னும் பிரமை.
2. மாற்றவோ, திருத்தவோ முடியாத விஷயங்களை எண்ணிக் கவலைப்படுவது.
3. நம்மால் செய்ய முடியவில்லை என்றால், அது வேறு யாராலும் முடியாது என்று வற்புறுத்துவது.
4. சின்னச் சின்ன ஆசைகளை, தமக்குப் பிரியமாய்ப்படுவதை, விலக்கிக் கொள்ள மறுப்பது.
5. வாசிப்பதையும், ஆழ்ந்து படிப்பதையும் பழக்கமாக்கிக் கொள்ளாமலும், மனதைச் சீர்படுத்துவதில் அக்கறை கொள்ளாமலும் அலட்சியமாக இருப்பது.
6. பிறரும் நம்மைப் போலவே நினைக்க வேண்டும், வாழ வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது.
இதுவே நாம் நிம்மதியை இழப்பதற்கான ஆறு காரணங்கள்.
என்று ரோமன் தத்துவ ஞானியும் அரசியல் நிபுணருமான சிசரோ (Cicero) சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இதனை எழுதியிருக்கிறார்.