
கற்றவற்றையும் கற்க வேண்டியவற்றையும் கருத்தில் வைப்பவனே கல்வியில் விருப்பமுடையவன்.
- கன்பூஷியஸ்

எதையும் சிந்திக்காமல் படிக்கும்போது மனதில் குழப்பம் தோன்றுகிறது; அதே நேரத்தில் படிக்காமல் சிந்திப்பது சமநிலையைக் கெடுத்துவிடுகின்றது.
- கன்பூஷியஸ்

விஞ்ஞானத்தையும், வரலாற்று நூலையும் பிரித்துப் பேசக் கூடாது. தனி மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இந்த இரண்டையும் கற்க வேண்டும்.
- ஜவகர்லால் நேரு

படிப்பதைப் போல் செலவு குறைந்த பொழுதுபோக்கு வேறில்லை. அதைப்போல் இன்பமளிப்பதும் வேறில்லை.
- மான்டெயின்

ஒரு நூல் முழுவதையும் வேகமாகப் படிப்பதைவிட, ஒரு பக்கத்தை நன்றாக உணர்ந்து கொள்வது மேலாகும்.
- மெகாலே

ஒரு புத்தகத்தைத் தொடங்கிவிட்டதற்காக மட்டும் அதை முழுதும் படிக்க வேண்டியதில்லை.
- விதர்ஸ்பூன்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.