- பிரான்சன் ஆல்காட்

தாயின் அன்பை வெளியிட உலகத்தில் எந்த மொழியிலும் போதிய வார்த்தைகள் இல்லை.
- கோபீன்

ஈன்ற தாயிற்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை.
- நான்மணிக்கடிகை

நான் பார்த்ததிலேயே மிகுந்த அழகான பெண் என் அம்மா. நான் என் வாழ்க்கையில் பெற்ற அனைத்து வெற்றிகளுக்கும் அவரிடமிருந்து நான் பெற்ற தார்மீக, அறிவார்ந்த மற்றும் உடற்கல்வியே காரணமென்று கூறுவேன்.
- ஜார்ஜ் வாஷிங்டன்

எனது தாயின் பிரார்த்தனைகளை நினைவு கூருகின்றேன் அவை எப்பொழுதும் என்னைப் பின்தொடர்கின்றன. அவை வாழ்நாள் முழுவதும் என்னை பாதுகாப்பு அரணாக பற்றிக்கொண்டுள்ளன.
- ஆப்ரஹாம் லிங்கன்

உங்களிடம் சொல்ல முடியாத அளவுக்கு உறுதியான செல்வம், தங்க நகைப் பெட்டகங்கள் மற்றும் தங்க கருவூலங்கள் என எல்லாம் இருக்கலாம், ஆனால் ஒருபோதும் நீங்கள் என்னை விட பணக்காரனாக முடியாது. அனைத்து செல்வங்களை விட உயர்ந்த, என்னை படிக்க வைத்த ஒரு தாய் என்னிடம் இருந்தாள்.
- ஸ்டிரிக்லேண்ட் கில்லன்

நான் கீழே விழும் போது எனக்கு உதவ ஓடி வருவார், ஒரு அழகான கதையை சொல்லி என் வலியை மறக்கச் செய்வார், காயங்களை குணமாக்க அவ்விடத்தில் முத்தங்களை பொழிவார், அவர் யார்? அவர் தான் என் அம்மா.
- ஆன் டெய்லர்

தாய்மார்கள் மட்டுமே வருங்காலத்தை சிந்திக்க முடியும் - ஏனென்றால் அவர்கள்தான் குழந்தைகளின் வடிவில் வருங்காலத்தைப் பெற்றெடுக்கிறார்கள்
- மேக்ஸிம் கோர்கி

ஒரு நல்ல தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமானவள்.
– ஹெர்பட்

தாயால் உருவாக்கப்படுபவன்தான் சிறந்த மனிதன்.
– எமர்சன்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.