யார் பணக்காரன்?

துணிவுள்ளவனுக்கே செல்வம் சேரும்.
- கதா சரித் சாகரம்

அதிகமாக வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல, அதிகமாகக் கொடுப்பவனே பணக்காரன்.
- எரிச் ஃப்ரோம்

நல்ல காலம் வந்துவிட்டால் எல்லா ரத்தினங்களும் , முயற்சி செய்யாமலேக் கிடைத்து விடும்.
– ராமாயண மஞ்சரி

பணத்தை மிச்சப்படுத்த சந்தைப்படுத்தலை நிறுத்துபவர்கள், நேரத்தை மிச்சப்படுத்த கடிகாரத்தை நிறுத்துபவர்களைப் போன்றவர்கள்.
- ஹென்றி ஃபோர்ட்

சம்பாதித்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்க வேண்டும்.
– பஞ்சதந்திரம்

செல்வம் என்பது வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் திறனாகும்.
- ஹென்றி டேவிட் தோரே

யாருடைய செல்வம் நிலையாக நின்றது?
- ராஜ தரங்கிணி

பணம் ஒரு கொடூரமான எஜமான், ஆனால் மிகச் சிறந்த வேலைக்காரன்.
- பி.டி. பர்னம்

நல்ல குணங்களே தங்க கட்டிகள் ஆகும்.
– நீதி சதகம்

பணக்காரர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து எஞ்சியதைச் செலவு செய்கிறார்கள். ஏழைகள் தங்கள் பணத்தைச் செலவு செய்து எஞ்சியதை முதலீடு செய்கிறார்கள்.
- ஜிம் ரோன்

அந்தி நேரமும், மின்னலும், செல்வமும் எங்கே எப்போது நிலையாக நின்றது.
- கதாசரித் சாகரம்

பணம் என்பது வெறும் எண்களே மேலும் எண்கள் ஒருபோதும் முடிவடையாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பணம் தேவை என்றால், மகிழ்ச்சிக்கான உங்கள் தேடல் ஒருபோதும் முடிவடையாது.
- பாப் மார்லி

ஒருவருக்குப் பணம் இல்லாவிடினும் அவருடைய செல்வாக்கேப் பெருஞ் செல்வமாகும்.
– கஹாவத் ரத்னாகர்

பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது, ஆனால் அது நிச்சயமாக உங்களுக்கு சிறந்த நினைவுகளைக் கொடுக்கும்.
- ரொனால்ட் ரீகன்

துணிவும் திறமையும் உள்ளவரிடத்தில் லட்சுமி (செல்வம்) வசிக்கிறாள்.
– கீதா உபதேசம்

பணம் தான் மனிதனை வேடிக்கையாக செயற்பட வைக்கிறது.
- எமினெம்

பணம் பேராசையை வளர்க்கிறது.
– பாரத மஞ்சரி

அனைத்து செல்வங்களிலும் மிகச் சிறந்த செல்வம் தன்னிறைவு.
- எபிகியூரஸ்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.