கடவுளின் நீதி

கடவுளைத் தன்னில் காணாதவனுக்குக் கடவுள் இல்லை.
- டால்ஸ்டாய்

நானில்லையானால் கடவுளும் இருக்க முடியாது.
- எக்கார்ட்

கோவிலில் வைத்துக் கும்பிடும் கடவுளை மனிதனே சிருஷ்டித்தான். அதனால், மனிதன் தன்னைப் போலவேக் கடவுளையும் படைத்திருக்கிறான்.
- ஹெர்மீஸ்

கடவுள் கோவில் கட்டும் இடத்தில் எல்லாம் சாத்தானும் ஒரு கோவில் கட்டிவிடுகிறான். அதுமட்டுமா? அவன் கோவிலுக்கே அடியார்களும் அதிகம்.
- டீபோ

ஒருவன் கடவுள் பக்கம் இருப்பின், அவன் ஒருவனே பெரும்பான்மைக் கட்சி ஆகிவிடுவான்.
- வெண்டெல் பிலிப்ஸ்

தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம்.
- சாக்ரடீஸ்

ஆன்ம எளிமை கண்டே ஆண்டவன் மகிழ்கிறான். எளிமைக் குணத்தைக் கண்டுதான் மகிழ்கிறான்; இறக்கும் குணத்தைக் கண்டன்று.
- கதே

குழந்தை இயல்புடையவர்-அதாவது எளிதில் மகிழ்பவர், அன்பு செய்பவர், பிறர்க்கும் மகிழ்வூட்டுபவர். இவர்க்கே கடவுள் ராஜ்யம்.
-ஆர். எல். ஸ்டீவன்ஸன்

கடவுள் பார்ப்பதைப் போல் எண்ணி மனிதரோடு வாழ்க; மனிதர் கேட்பதைப் போல் எண்ணிக் கடவுளோடு பேசுக.
- ஸெனீகா

மனிதர் அறிய விரும்பாதது எதையும் கடவுளிடம் கேட்காதே. கடவுள் அறிய நீ விரும்பாதது எதையும் மனிதனிடம் கேட்காதே.
- ஸெனீகா

வட்டத்தில் எந்தவிடத்திருந்தும் மத்திக்குச் செல்ல வழியுண்டு. எவ்வளவு பெருந் தவறானாலும் இறைவனிடம் செல்ல வழியுண்டு.
- ரூக்கர்ட்

கடவுளை அறிதல், கடவுளிடம் அன்பு செலுத்துதல் இரண்டிற்கும் இடையிலுள்ள தூரம் எவராலும் இவ்வளவு என்று சொல்ல முடியாது.
- பாஸ்கல்

கடவுளை அறிந்து விடுவோமென்று எதிர்பார்க்க இயலாது. ஆனால், கடவுளை அறியாமல் வேறு எதையும் அறியவும் எதிர்பார்க்க இயலாது.
- பூடின்

கடவுளின் நீதி மெதுவாகத்தான் நகரும். ஆனால் ஒருபொழுதும் வழியில் தங்குவதில்லை. தவறு செய்தவனைச் சேர்ந்தேவிடும்.
- ராபர்ட் பிரெளனிங்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.