அன்பு மொழிகள்

அன்பில் நம்பிக்கை வை; அது துயரில் கொண்டு போய் விட்டாலும் பரவாயில்லை; இதயத்தை மூடாதே.
- காண்டேகர்

எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள்.
- மகாத்மா காந்தி

மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம்.
- செசுடர் பீல்டு

அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும்.
- இங்கர்சால்

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நாம் அன்பு செலுத்த முடியாது.
- அரிஸ்டாட்டில்

முழுமையான அன்பு இல்லையேல் முழுமையான அழகு இருக்க முடியாது; அழகு முழுமையாக இல்லாத இடத்தில் முழுமையான மகிழ்ச்சி ஏற்பட இயலாது.
- அரவிந்தர்

அன்பும் மரியாதையும் இருப்பவன் உலகத்தில் எதையும் சாதித்து விடுவான். தீமை செய்பவனும் அவனிடம் பணிவான்.
- கிருபானந்த வாரியார்

அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன். ஏனெனில் அன்பே கடவுள்.
- இயேசு கிறிஸ்து

அறிவு இறைவனின் உறைவிடத்தை நாடுகிறது. ஆனால் அன்புதான் இறைவனின் உறைவிடம்.
- முகமது நபி

அன்பு செய், உதவி செய், உன்னால் முடிந்ததை செய், ஆனால் நிபந்தனை ஏற்படுத்தாதே.
- சுவாமி விவேகானந்தர்

சாதாரண செயல்கள் கூட அன்புடன் கலந்தால் அழகு பெறுகின்றன.
- செல்லி

பிறருடைய அன்பில் ஆனந்தம் காணும்பொழுதுதான் ஒருவன் உண்மையாக வாழ்ந்தவனாவான்.
- கதே

செவிடரும் கேட்கக்கூடிய, பார்வையற்றோரும் படிக்கக் கூடிய மொழிதான் அன்பு.
- மார்க் ட்வைன்

அன்பும், நம்பிக்கையுமே ஓர் ஆன்மாவுக்குரிய தாய்ப்பால்.
- ஜான் ரஸ்கின்

அன்பு தானாக வருவது. அதை விலைக்கு வாங்க முடியாது.
- லாங்ஃபெல்லோ
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.