பணம் குறித்த உலகப் பழமொழிகள்

பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை.
- டென்மார்க்

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை.
- பாரசீகம் (ஈரான்)

பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை.
- ஆஸ்திரேலியா

இறைவன் வானை ஆள்கிறான். பணம் உலகை ஆள்கிறது.
- ஜெர்மன்

பணமில்லாதவன், பாய்களில்லாத கப்பலைப் போன்றவன்.
- ஜப்பான்

பணமிருந்தால் நீ பாம்பு; பணமிலலாவிட்டால் நீ புழு.
- சீனா

பணத்தை யாராலும் சம்பாதிக்க முடியும். ஆனால், அதை அறிவாளியால்தான் வைத்திருக்க முடியும்.
- அமெரிக்கா

பணம் அறிவாளர்களுக்கு அடங்கித் தொண்டு செய்யும். ஆனால், மூடர்களை ஆட்சி செய்யும்.
- பிரான்சு

பணம் பேசத் தொடங்கினால், உலகம் வாயை மூடிக் கொள்ளும்.
- எஸ்டோனியா

பணம் வரும் போது இரண்டு கால்களுடன் வரும். போகும் போது நான்கு கால்களுடன் செல்லும்.
- ரசியா

இரண்டு கைப்பிடி உண்மையைக் காட்டிலும், ஒரு கைப்பிடி பணம் வல்லமையுடையது.
- டென்மார்க்

மனிதனைப் பிடிப்பதற்குச் சிறந்த தூண்டில் பணம்தான்.
- இங்கிலாந்து

பணம் பெருகும் போது, பணத்தாசையும் பெருகும்.
- லத்தீன்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.