விடுகதைகள் - அது என்ன?
சித்ரகலா செந்தில்குமார்
1. பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல, பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல. அது என்ன ?
2. ஊரார் அறிந்த காரம், ஊரை அடக்கும் காரம். அது என்ன ?
3. கண், காது, மூக்கு, வாய் இல்லாத முகம். இம்முகமில்லை என்றால் எவருடனும் பழகமுடியாது. அது என்ன?
4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசி வரை இனிப்பையேத் தரும். அது என்ன?
5. இளமையில் பச்சையாக இருக்கும். முதுமையில் சிவந்து போகும். ஆனால், குணத்தில் எப்போதும் எரிப்புதான். அது என்ன?
6. வயதான ஒருவருக்கு புதிதாக வரும் கை. அது என்ன?
7. கருப்பு நிறமுடையது, கபடம் அதிகம் கொண்டது, கூவி அழைத்தால் போதும், கூட்டம் சேர்த்து வந்திடும். அது என்ன?
8. நிலத்தில் முளைக்காத செடி. நிமிர்ந்து நிற்காத செடி. அது என்ன ?
9. பறக்காத பந்து, பகட்டான பந்து, வாயிலேப் பிச்சுப் போட்டாலும் இனிக்கும் பந்து. அது என்ன?
10. தாளமில்லாத ஆட்டம், தாய்மார்கள் விரும்பாத ஆட்டம். அது என்ன?
விடைகள்:
1. வௌவால்
2. அதிகாரம்
3. அறிமுகம்
4. கரும்பு
5. மிளகாய்
6. பொக்கை
7. காகம்
8. தலைமுடி
9. லட்டு
10. சூதாட்டம்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.