அது என்ன? - விடுகதைகள்
சித்ரகலா செந்தில்குமார்
1. தொட்டால் பிடித்துக் கொள்ளும், பசை அல்ல. விளக்கு எரிக்கும், எண்ணெயும் அல்ல. அது என்ன?
2. படீரென வெடிக்கும், பட்டாசு அல்ல. பறந்து விரைந்து ஓடும், விமானமும் அல்ல. அது என்ன?
3. அழகான சிட்டுக்குருவிக்கு எட்டு முழம் சித்தாடை. அது என்ன?
4. அரைச்சாண் ராணியின் வயிற்றில் ஆயிரம் முத்துக்கள். அது என்ன?
5. அவனைப் புரட்டினால் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் தெரியும். அது என்ன?
6. மூன்று கோடு சட்டை போட்டது. மரத்தின் மேல் தாவிக் குதித்துச் செல்லும் திறனுடையது. அது என்ன?
7. ஊரெல்லாம் சுற்றி வந்தாலும், வீட்டுக்குள் மட்டும் வராதது. அது என்ன?
8. கண்ணுக்குத் தெரியாதது. இது இல்லாவிட்டால் உயிர் கிடையாது. அது என்ன?
9. நீர் ஊற்றினால் மறைந்துவிடும். நீர் வற்றினால் விளையும். அது என்ன?
10. யாரும் ஏற முடியாத மரம். கிளைகள் எதுவுமில்லாத மரம். அது என்ன?
விடைகள்:
1. மின்சாரம்
2. பலூன், டயர்
3. வெங்காயம்
4. வெண்டைக்காய்
5. அகராதி (டிக்சனரி)
6. அணில்
7. செருப்பு
8. காற்று
9. உப்பு
10. வாழை மரம்
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.