அவன் யார்? என்று சொல்லுங்க....!
சித்ரகலா செந்தில்குமார்
1. திட்டித்திட்டி தீயில் போட்டாலும், அள்ளி அள்ளி அனலில் போட்டாலும், வாரி வாரி வாசம் தருவான். மனம் குளிர நறுமணம் தருவான். அவன் யார்?
2. ஒரு கால் மனிதனுக்கு உடலெல்லாம் கைகள். அவன் யார்?
3. முள் இருந்தாலும் குத்தாதவன். அவன் யார்?
4. எட்டுக் கை குள்ளன் இவனுக்கு ஒற்றைக் கால்தான். அவன் யார்?
5. ஒற்றைக்கால் ஆட்டக்காரன், ஒய்யார ஆட்டக்காரன், ஓயும் போது மண்னோடு சாய்ந்துவிடுவான். அவன் யார்?
6. ஒல்லி உடம்புக்காரன், ஊரை எரிக்கும் குசும்புக்காரன். அவன் யார்?
7. பிறப்பதும் தண்ணீரிலே, இறப்பதும் தண்ணீரிலேதான். அவன் யார்?
8. உச்சியில் பிறந்த இவன். உச்சந்தலை சூட்டையும் தணிப்பான். அவன் யார்?
9. இளமையில் உயரமாக இருக்கும் இவன், முதுமையில் குள்ளமாகிப் போவான். அவன் யார்?
10. இவனை ஒட்டியவன் ஒருவன். இவனைப் பிரிப்பவன் இன்னொருவன். அவன் யார்?
விடைகள்:
1.சாம்பிராணி
2. மரம்
3. கடிகாரம்
4. குடை
5. பம்பரம்
6. தீக்குச்சி
7. உப்பு
8. இளநீர்
9. மெழுகுவர்த்தி
10. கடிதம்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.