வாங்க... விடை சொல்லுங்க....!
சித்ரகலா செந்தில்குமார்
1. கூட்டுக்குள்ளேக் குடியிருக்கும் குருவியுமல்ல, பாய்ந்து செல்லும் புலியுமல்ல, எதிரியைக் கொல்லும் வீரனும் அல்ல. அது என்ன?
2. வாள் வைத்திருக்க மாட்டான், பாதுகாப்புக்குக் கேடயம் மட்டும் வைத்திருப்பான். எந்தவொரு போருக்கும் போகமாட்டான். அவன் யார்?
3. இரண்டில் ஒன்று பிரிந்து போய்விட்டால், மற்றொன்று பயன்படாமலேப் போய்விடும். அது என்ன?
4. அச்சு இல்லாத சக்கரம், அழகு தரும் சக்கரம். பெண்களுக்கு மட்டுமேப் பிடித்த சக்கரம். அது என்ன?
5. முதுகை தொட்டால் மூச்சு விடுவான் பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான். அவன் யார்?
6. தொப்பி போட காவல்காரன். ஆனால், உரசிவிட்டால் சாம்பலாகிப் போவான். அவன் யார்?
7. மூவரும் ஒன்று சேர்ந்தால், வாயைச் சிவக்க வைத்துவிடுவார்கள். அவர்கள் யார்?
8. அள்ள அள்ளக் குறையாது. ஆனால், குடிப்பதற்குக் கொஞ்சமும் உதவாது. அது என்ன?
9. பூக்கும், காய்க்கும், வெடிக்கும். ஆனால், பழுக்க மட்டும் செய்யாது. அது என்ன?
10. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல. பட்டை போட்டிருப்பான் சாமியாருமல்ல. அவன் யார்?
விடைகள்:
1. அம்பு
2. ஆமை
3. செருப்பு
4. வளையல்
5. ஆர்மோனியப் பெட்டி
6. தீக்குச்சி
7. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு
8. கடல் நீர்
9. இலவம் காய்
10. அணில்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.