1. தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள்.
அவள் யார்?
2. முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை.
அது எது?
3. பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது.
அது என்ன?
4. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள்.
அது என்ன?
5. ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும்.
அது என்ன?
6. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல்,
அது என்ன?
7. நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான்.
அவன் யார்?
8. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ.
அது என்ன?
9. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை.
அது என்ன?
10. பூக்கும், காய்க்கும், வெடிக்கும். ஆனால் பழுக்க மட்டும் செய்யாது.
அது என்ன?
விடைகள்:
1. மீன் வலை
2. ஆபத்து
3. கண்கள்
4. நிலா
5. ஊதுபத்தி
6. விக்கல்
7. நாற்காலி
8. சிரிப்பு
9. வழுக்கை (இன்னொரு விடை: பொக்கை)
10. இலவம்பஞ்சு
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.