1. 1. அடித்தாலும், உதைத்தாலும் அழாது.
அது என்ன?
2. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு.
அது என்ன?
3. இதயம் போல் துடித்திருக்கும் இரவு பகல் விழித்திருக்கும்.
அது என்ன?
4. காலைக் கடிக்கும், செருப்பல்ல. காவல் காக்கும், நாயல்ல.
அது என்ன?
5. நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி.
அது என்ன?
6. இவனும் ஒரு காகிதம் தான். ஆனால், மதிப்போடு இருப்பான்.
அது என்ன?
7. ஒன்று போனால், மற்றொன்றும் வாழாது.
அது என்ன?
8. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான்.
அது என்ன?
9. முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை.
அது என்ன?
10. தேனியிலிருந்து தென்காசி வரை ஆடாமல் அசையாமல் போகிறது.
அது என்ன?
விடைகள்:
1. பந்து
2. விரல்கள்
3. கடிகாரம்
4. முள்
5. தலை முடி
6. பணம்
7. செருப்பு
8. குளிர்
9. ஆபத்து
10. தண்டவாளம்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.