1. எண்ணும் முள்ளும் இல்லாத கடிகாரம்; எவராலும் பார்க்க இயலாத கடிகாரம்.
அது என்ன?
2. உள்ளே இருந்தால் ஒடித்திரிவான்; வெளியில் வந்தால் விரைவில் மடிவான்.
அவன் யார்?
3. படுத்துத்துங்கினால் கண்முன் ஆடும்; அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும்.
அது என்ன?
4. பால் இல்லாமல் பருப்பான்; நோய் இல்லாமல் இளைப்பான்.
அவன் யார்?
5. தட்டுப் போல் இருக்கும் - அதில் சொட்டுத் தண்ணிர் ஒட்டாது.
அது என்ன?
6. நடக்கத் தெரியாதவன்; நடப்பவனுக்கு வழி காட்டுகிறான்.
அவன் யார்?
7. கரை உண்டு; படிக்கட்டு இல்லை. தலைப்பு உண்டு; கட்டுரை இல்லை.
அது என்ன?
8. கேட்டால் பேசமாட்டான் - இரண்டு போட்டால் பேசுவான்.
அவன் யார்?
9. கண்ணாடிக் குண்டு காற்றிலே பறக்குது; கையாலே தொட்டால் காணாமல் போகுது.
அது என்ன?
10. காலும் இல்லை; கையும் இல்லை. காடும் மலையும் நெடுகச் செல்வான்.
அவன் யார்?
விடைகள்:
1. இதயம்
2. மீன்
3. கனவு
4. நிலா
5. தாமரை இலை
6. கைகாட்டி
7. புடவை
8. மத்தளம்
9. சோப்பு நீர்க்குமிழி
10. பாதை
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.