1. அனலிலே பிறப்பாள், ஆகாயத்தில் பறப்பாள்.
யார் அவள்?
2. கட்டுப்பட்டு இருந்த மகளை, விட்டுப் பிரிந்து வந்தாள்.
யார் அவள்?
3. அந்தரமான குகையிலே, சுந்தரமானவள் ஆடுகிறாள்.
யார் அவள்?
4. தண்டைச் சலங்கைக்காரி; தலைவாசல் வீட்டுக்காரி; அவளைத் தொடுவானேன்? கவலைப்படுவானேன்?
யார் அவள்?
5. காகிதத்தைக் கண்டால் கண்ணிர் விடுவாள்; முக்காடு போட்டால் சொக்காயில் தொங்குவாள்.
யார் அவள்?
6. பிறக்கும்போது சுருண்டிருப்பாள்; பிறந்த பின்னர் விரிந்திருப்பாள்.
யார் அவள்?
7. குட்டைக் குட்டைச் சீமாட்டி, குளித்துக் குளித்துக் கரை ஏறுகிறாள்.
யார் அவள்?
8. முற்றத்தில் நடப்பாள்; மூலையில் கிடப்பாள்.
யார் அவள்?
9. ஈரப் புடவைக்காரி, இருபத்தெட்டுச் சுற்றுக்காரி.
யார் அவள்?
10. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி. பாதி நாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள்.
யார் அவள்?
விடைகள்:
1. புகை
2. உமி
3. நாக்கு
4. தேள்
5. பேனா
6. வாழை இலை
7. வாளி
8. துடைப்பம்
9. வெங்காயம்
10. நிலா
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.