1. உச்சிக் கிளையிலே ஒரு முழக் குச்சி ஊசலாடுது.
அது என்ன?
2. வெள்ளைக் குதிரையும் கறுப்புக் குதிரையும் மாறி மாறி ஒடும்; பிடிக்க முடியாது.
அவை எவை?
3. மதுரையிலிருந்து மும்பை வரை ஆடாமல் அசையாமல் செல்லுது.
அது என்ன?
4. சிறுசிறு கதவுகள்; செய்யாக்கதவுகள்; திறக்க அடைக்க சத்தம் செய்யாக் கதவுகள்.
அவை எவை?
5. சின்னஞ்சிறு வீட்டில் சிப்பாய்கள் பல பேர் இருக்கின்றனர்.
அது என்ன?
6. நிலத்தை நோக்கி வருவான்; நுரையைக் கக்கிச் செல்வான்.
அவன் யார்?
7. காலையில் ஊதும் சங்கு; கறி சமைக்க உதவும் சங்கு.
அது எது?
8. பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.
அது எது?
9. கடல் நீரில் வளரும்; மழை நீரில் மடியும்.
அது என்ன?
10. உரசினால் போதும்; உயிரை விட்டு விடும்.
அது எது?
விடைகள்:
1. முருங்கைக்காய்
2. பகல், இரவு
3. தண்டவாளம்
4. கண் இமைகள்
5. தீப்பெட்டி
6. கடல் அலை
7. சேவல்
8. நெருப்பு
9. உப்பு
10. தீக்குச்சி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.