சிறுவன் சாப்பிட்ட சாதாரண ஐஸ்க்ரீம்
எம். ஜெயராமன்
ஐஸ்கிரீம் கடை ஒன்றில் பத்து வயது சிறுவன் ஐஸ் கிரீம் சாப்பிடச் சென்றான்.
அங்கு பணிபுரியும் பரிமாறும் பெண்மணி உயர்ந்த வகை ஐஸ் கிரீம் ஐந்து ருபாய் என்றும், சாதாரண ஐஸ் கிரீம் நான்கு ருபாய் என்றும் சொன்னாள்.
சிறுவன் தான் கொண்டு வந்திருந்த சில்லறையை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தான். நேரமாகவே, அந்தப் பெண்மணி சற்று அலுப்படைந்து மற்ற வாடிக்கையாளர்களை கவனிக்கச் சென்று விட்டாள்.
சிறிது நேரம் கழித்து அந்த சிறுவன் ஒரு சாதாரண ஐஸ் கிரீம் கொடுக்குமாறு அந்த பெண்மணியிடம் கேட்டான்.
சிறுவன் சாப்பிட்டுச் சென்றவுடன் சுத்தம் செய்யச் சென்ற பெண்மணியின் கண்களில் கண்ணீர் ஏனென்றால், அந்த மேசையின் ஓரத்தில் ஒரு ரூபாயை வைத்துவிட்டு சென்றிருந்தான் சிறுவன்.
அந்தப் பெண்மணிக்கு டிப்ஸ் கொடுப்பதற்காக அந்த சிறுவன் உயர்ந்தவகை ஐஸ் கிரீமை சாப்பிடாமல் சாதாரண ஐஸ் கிரீமைச் சாப்பிட்டுச் சென்றிருக்கிறான்...
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.