இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுவர் பகுதி
கதை

கொக்கோவும் மிங்கியும்

வாணமதி


மனிதக் குரங்கு கொக்கோ மச்சாள் மிங்கியுடன் காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்தது. தனது வீட்டுக்குப் போக வேண்டுமென்ற நினைப்பே அதற்கில்லை. அவ்வப்போது அம்மா ஞாபகம் வந்தாலும் மாமா வீட்டில் இருந்தால் திட்டமட்டாரென தனக்குத்தானே சமாதானம் சொன்னது.

கொக்கோ ... இன்று உனக்கு நண்பர் ஒருவரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் வருகிறாயா? என்று கேட்டது மிங்கி.

மிங்கி இன்று நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று தொடர்பே இல்லாது பதில் சொல்லி அசடு வழிந்தது கொக்கோ...

கொக்கோவின் வார்த்தையால் மனம் மகிழ்ந்த மிங்கியும் வெட்கப்பட்டுக் கொண்டே, உன் கண்களுக்கு நான் எப்போதுமே அழகுதான் என்று சொல்லிச் சிரித்தது.

அத்தோடு வா போகலாமென.... ... கட்டாயப்படுத்தித் தனது நண்பரை அறிமுகப்படுத்துவதற்காகக் கொக்கோவை அழைத்துச் சென்றது மிங்கி.

மிங்கி மரத்தில் முன்னே தாவி தாவிச்செல்ல கொக்கோ பாட்டொன்றை முணுமுணுத்துக் கொண்டே பின்னே சென்றது.

தூரத்தில் ஒரு மரத்தின் கீழே நரியொன்று படுத்திருந்தது.

கொக்கோ ... அங்கே பார்... என் நண்பர் மார்ஷ் என்று மரக்கிளையினை ஒற்றைக்கையில் பிடித்துக் கொண்டே மறுகையால் நரி மார்ஷ் படுத்திருந்த இடத்தைச் சுட்டிக்காட்டியது மிங்கி.

மனிதக்குரங்கு கொக்கோவிற்கு ஏனோ நரி மார்ஷைப் பார்த்த நிமிடமேப் பிடிக்கவேயில்லை.

இதைச் சொல்லி மிங்கியின் மனதை நோகடிக்க விரும்பாத கொக்கோ ஓ... உன் நண்பர் மிகவும் கம்பீரமாக இருக்கிறார் மிங்கி. எத்தனை நாட்களாக இந்த நண்பருடன் பழக்கமெனக் கேட்டது.

மார்ஷ் மிகவும் புத்திசாலியும் கூட ஒரு மாத காலமாகவே பழக்கம்.

ஒரு நாள் சில வேட்டைக்கார மனிதர்கள் பள்ளி முடிந்து வரும்போது எம்மைத் துரத்தினர். திடீரென எம் முன்னேக் கடவுள் மாதிரி வந்துகுதித்த மார்ஷ் தப்பிச் செல்லவதற்கு புதிய வழியைக் காட்டினார். அன்றிலிருந்து நாங்கள் நல்ல நண்பர்கள் என்றது மிங்கி.

கொக்கோவின் மூளை ஏதோ கணக்குப் போட்டது.

ஹாய் மார்ஷ் என்று அழைத்தது மிங்கி.

வா மிங்கி வா..!

இது யார் புது நண்பர் என்று தனது கூர்மையான கண்களை இடுக்கிக் கொண்டே கேட்டது நரி மார்ஷ்.


வணக்கம் நண்பரே..!

நான் மிங்கியின் மச்சான் கொக்கோ.

பக்கத்துக் காட்டில் வசிக்கின்றேன் என்றது கொக்கோ.

ஓ...மிங்கி வாயோது புகழும் புத்திசாலி கொக்கோ நீங்கள் தானா? என்று கபடச் சிரிப்பு சிரித்துக் கொண்டது நரி மார்ஷ்.

இருங்கள் குடிப்பதற்கு ஏதேனும் கொண்டு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டே தனது கற்குகைக்குள் புகுந்து கொண்டது.

அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த இரு மனிதக் குரங்குகளையும் எப்படியாவது இந்தக் குகைக்குள் அழைத்து வந்து விடவேண்டும்.

எப்படியென? யோசித்துக் கொண்டே திராட்சை இரசத்தைக் குவளையில் நிரப்பிக் கொண்டது.

நண்பர்களே..! இனிமையான திராட்சை ரசம் அருந்துங்கள் ! என்று சொல்லிக்கொண்டே... உங்கள் இருவரையும் எனது வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கலாமென்று ஆசைப்படுகிறேன்.

உங்கள் சம்மதம் வேண்டி நிற்கிறேன் எனப் பணிவுடன் கேட்டது நரி மார்ஷ்.

உடனே மிங்கி எந்தவித யோசனையுமின்றி வருகிறோம் !

எப்போது என்றது மகிழ்ச்சியுடன்.

ஹய்யா... மகிழ்ச்சி... மகிழ்ச்சி என்று துள்ளியது நரி மார்ஷ்.

மிங்கியைத் தோழமையுடன் கட்டியணைத்துக் கொண்டே நாளை இரவே வந்துவிடுங்களேன் என்றது நரி மார்ஷ்.

கொக்கோவோ நரி கொடுத்த திராட்சை இரசத்தை உறிஞ்சிக் கொண்டே பலத்த யோசனையில் இருந்தது.

நரி இயல்பாகவே இல்லையே... நரியின் கண்களில் ஏதோ கபடத்தனம் மறைந்துள்ளதாக ஊகித்தது கொக்கோ.

என்ன நண்பரே அதிகமாக யோசிக்கிறீர்கள்...? என் விருந்தில் கலந்தோகொள்ள இஷ்டமில்லையா? என்று சோகத்துடன் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டது நரி மார்ஷ்.

உடனடியாகத் தன்னைச் சுதாகரித்த கொக்கோ, இல்லை நண்பரே... இல்லை! நீங்கள் இருவருமே முன்பே நண்பர்கள்... இன்றுதான் நாமிருவரும் பார்த்துள்ளோம். எப்படி விருந்தில் கலந்து கொள்வது என்ற தயக்கமே என்றது கொக்கோ.



அதனால் என்ன நண்பரே...?

இந்த நிமிடம் முதல் நீங்களும் என் இனிய நண்பரே என்று சொல்லிக் கொண்டு கொக்கோவையும் கட்டியணைத்தது நரி மார்ஷ்.

அந்த நிமிடம் கொக்கோவின் முகம் “இஞ்சி தின்ற குரங்கு போல மாறியது”

இதைச் சட்டென கவனித்த மிங்கி குழப்பமடைந்தது.

மிங்கி மிகவும் அழகாகக் காட்டுப்பூக்களாலும், இலைகளாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டது.

கொக்கோவும் தன்னை மிகவும் கம்பீரமாக அலங்கரித்துக் கொண்டது.

இருவரும் நரி மார்ஷின் விருந்துக்கு புறப்படனர்.

வழிநெடுகிலும் ஒரு வார்த்தை கூட இருவரும் பேசவேயில்லை. அவ்வப்போது தனது தலையைக் கொக்கோவின் தோளில் சாய்த்துக் கொள்ளும் மிங்கி.

அன்போடு இதமாக தடவிக்கொடுத்தது கொக்கோ.

இவர்களது வரவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது நரி மார்ஷ்.

பலமுறை குகையை விட்டு வெளியே வந்து பார்த்தது. எரிச்சலடைந்தது... இன்னும் வரவில்லையே என்று பரபரத்தது.

இருந்தபோதும், தனது எண்ணம் நிறைவேற வேண்டுமென்ற ஆவலோடு பொறுமை காத்தது நரி மார்ஷ்.

கொக்கோவும், மிங்கியும் நரியின் குகைக்கு வந்தனர். ஆனால் பெரிய கற்பாறையால் குகைக் கதவு அடைக்கப்பட்டிருந்தது.

நண்பரே...! நண்பரே... நாங்கள் வந்துவிட்டோம் கதவைத் திறவுங்கள் என்றனர் இருவரும் உரத்த குரலில்.

எந்தவிதச் சத்தமும் இல்லை...

மீண்டும் நண்பரே நாங்கள் வந்துவிட்டோம் கதவைத் திறவுங்கள் என்றனர்.

இப்போது நரி...

வாருங்கள் நண்பர்களே !

விருந்துக்காக காய்கறிகள் பறித்து வரத் தோட்டத்துக்குச் சென்றேன். அங்கு கால் சுளுக்கி விட்டது. மிகவும் சிரமப்பட்டே வீட்டுக்கு வந்தேன்.

வலியோடு விருந்தும, தயார் செய்துவிட்டேன். ஆனால், இப்போது என்னால் நடக்க முடியவில்லை... உயிர் போகும் வலி நண்பர்களே... கதவைத் திறந்து கொண்டு உள்ளே வாருங்கள் என்றது நரி, வருத்தமான குரலில்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்....!

கொக்கோ மிங்கியின் கையை இறுகப் பற்றிக் கொண்டு குகைக்குள் சென்றது.

அவ்வளவே....

நரி தயாராக வைத்திருந்த சுருக்கில் கால் மாட்டிவிட இருவருமே தடாரென கீழே விழுந்தனர்.

ஆ... ஹா... ஹா... ஆஹா என்ன அருமையான நேரம் நண்பர்களே என்று கோரமாகச் சிரித்தபடி நரி முன்னே வந்தது.

இப்போது இருவருமே வசமாக மாட்டிவிட்டீர்கள்... என் நண்பர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் அன்புப் பரிசாக உங்களைக் கொடுக்கப் போகிறேன்.

கைமாறாக எனக்கு வேண்டிய இனிய உணவுகளை அவர்கள் நாளும் வழங்குவார்கள் என்றது நரி மார்ஷ் .

என்ன உளறுகிறாய் என்றது கொக்கோ கோவத்துடன்.

புத்திசாலி நண்பரே ! எனது வேட்டைக்கார நண்பர்களுக்கு மனிதக் குரங்குகள் வேண்டும்! அதிலும் உன்னைப் போன்ற புத்திசாலிகள் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி. என்னிடம் உதவி வேண்டிநின்றனர். எனக்கும் வயதாகி விட்டது. முன்பு போல காடுகளும் இல்லை. உணவு தேடியலைவது என்பது வாழ்வா? சாவா? என்ற போராட்டமாகிவிட்டது. ஊருக்குள் சென்று கோழி, ஆடுகளைத் திருடுவது கூட முன்போல இல்லை. யாருடைய வீட்டிலும் ஆடு, மாடு, கோழி கூட இல்லை. மனிதர்களும் சோம்பறிகளாகிவிட்டார்கள். என் உயிர்மேல் பயம் வந்துவிட்டது நண்பர்களே...! உணவே இல்லாமல் ஒரு வேளை இறந்துவிட்டால்?அதனால் ஏதாவது வழி கண்டுபிடிக்க வேண்டுமென யோசித்த போதே வேட்டைக்காரக் கும்பலும் என் உதவி வேண்டி நின்றது.



இதுவரை உங்கள் கூட்டத்தில் பலபேர் அவர்களிடம் சிக்கி விட்டனர். ஏதோவொரு விலங்ககத்தில் இருப்பார்கள்... ஹா... ஹா... எனக் கேலியாக சிரித்தது நரி மார்ஷ்.

கோலிப்பண்டிகையின் போது தனது உறவுகளிடம் கூடிப் பேசிய தனது அப்பாவின் பேச்சு மிங்கிக்கு இப்போது ஞாபகத்தில் வந்தது.

“ஏதோ தப்பு நடக்கிறது போல தெரிகிறது. எல்லோரும் காட்டில் வாழும் நண்பர்களிடம் முன் எச்சரிக்கையுடன் இருங்கள் ! என்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார் அப்பா. இப்போதே மிங்கிக்கு யாவும் புரிந்தது. வாய்விட்டே அழத் தொடங்கியது மிங்கி...

எது குறித்தும் கவலைப்படாது கொக்கோ நரி மார்ஷின் சுயவிளக்கத்தை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தது.

நண்பரே உனது வயிற்றுப் பிழைப்புக்காக உன்னை நம்பி வந்த நட்புகளுக்குத் துரோகம் செய்யலாமா? இது விலங்குகள் குல தர்மம் ஆகுமா?எனக்கேட்டது.

புத்திசாலி கொக்கோவே... தர்மம் ஆவது அதர்மம் ஆவது. உங்களுக்கு மூளை எங்கே போனது? விருந்து என்றல் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு நாய் போல வந்துவிடுவீர்களா? என் உயிர் முக்கியம்! அதற்காக எதையுமே நான் செய்வேன், புரிகிறதா ! என்று சொல்லிக் கொக்கோவின் காலில் கல்லால் அடித்தது.

ஏய் தந்திர நரியே..! உன்னை நண்பராக நம்பியதுக்கு இதுவும் வேண்டும், இன்னும் வேண்டும்... எனச் சொல்லி மிங்கி அழுதது.

அப்போது மனித வாடையை நுகர்ந்த கொக்கோ கண்களை மூடிக்கொண்டே வலியால் துடிப்பது போல அவதியுற்றது.

ஐந்தாறு மனிதர்கள் குகைக்குள் நுழைந்தனர். கைகளில் பெரிய பெரிய பைகள். முழுவதும் நரி மார்ஷுக்கான உணவுகள்.

நண்பர்களே உங்களுக்கு வாக்குறுதி கொடுத்தபடி, இந்தப் புத்திசாலி மனிதக் குரங்கைப் பிடித்துக் கொடுத்து விட்டேன். காடுகள் முழுவதும் இதன் பெருமை சொல்கிறது. ஆனாலும், “அவசரக்காரனுக்கு புத்தி மத்திமம்“ என்பதை இந்தக் குரங்கு நிரூபித்து விட்டது.

தனது மிங்கியின் மயக்கத்தால் தானாகவே வந்து மாட்டிவிட்டது. இது ஒன்றும் புத்திசாலி அல்ல முட்டாள் என்று பற்களை இறுக்க கடித்துக்கொண்டே கீச்சிட்டது நரி மார்ஷ்.

வேட்டைக்கார மனிதர்கள் கொக்கோவையும், மிங்கியையும் கடத்திச் செல்வதற்கான வேலையில் ஈடுபட்டனர்.

அப்போது மிகத் தாழ்மையான குரலில் கொக்கோ சொன்னது...!

நண்பர்களே எங்களை எங்கோ அழைத்துச் செல்லப் போகிறீர்கள்!

இவள் என் அன்புக்குரிய மிங்கி. பிரியும் போது இவளுக்காக ஒரு பாட்டு பாடவேண்டுமென ஆசைப்படுகிறேன். இந்தப்பாட்டென்றால் இவளுக்கு உயிர். இவளுக்கு நான் கொடுக்கும் இறுதிப் பரிசும் கூட என்றது கொக்கோ...

வேட்டைக்கார மனிதர்கள் மனிதக்குரங்கு கொக்கோவின் பாட்டைக் கேட்க ஆசைப்பட்டனர்.

அத்தோடு அவர்களது காதலை இரசிக்கவும் விரும்பினர்.

உடனே யாவரும் கற்களில் அமர்ந்து கொண்டு பாடு... பாடு ... என்று கேலியாகக் கூச்சலிட்டனர்.

கொக்கோ உரத்த குரலில்... ‘நம்பாதே, நயவஞ்சகரை நம்பாதே, நம்பாதே, நயவஞ்சக நட்பையும் நம்பாதே’ என்று பாடியது.

காடு முழுவதும் அந்தக் குரல் எதிரொலித்தது.

அடுத்து வந்த சில நொடிகளில் பலத்த பிளிறல் சத்தங்கள், கர்ச்சனைகள், உறுமல்கள்... கண்மூடித் திறப்பதற்குள் நரியின் குகை முன் யானை, புலி, சிங்கம், மனிதக்குரங்குக் கூட்டங்கள்...

வேட்டைக்கார மனிதர்களை யாவும் ஒன்றாகச் சேர்ந்து பந்தாடின...

இது எதையுமே எதிர்பாராத நரி பயந்து ஒடுங்கி ஒரு ஓரமாக நின்றது.

நண்பர்களே நான் உங்கள் இனம்!

இந்தக் கேடுகெட்ட மனிதர்கள் என்னைக் கொன்று விடுவதாக அச்சுறுத்தினர். எனக்கு கொக்கோவின் புத்திசாலித்தனம் தெரியும். அதனால்தான் இவர்கள் சொன்னதுக்குச் சம்மதித்தேன் என்று பல்டி அடித்தது நரி மார்ஷ்.

நண்பரே எமக்கு திராட்சை இரசம் தரும் போதே சந்தேகம் இருந்தது. ஆனால் நீ என்னை இறுகக் கட்டியணைத்து விருந்துக்கு அழைக்கும் போது உமது உடலில் மனித வாடையை நுகர்ந்தேன்.

அப்போது புரிந்தது நீ துரோகியாக வாழ்கிறாய் என்று.

எனது நண்பர்களை அழைத்து, உனது இனத் துரோகத்தை விளக்கினேன். நமக்குள் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனாலும் நம் இனத்தையே அழிக்கும் மனம் யாருக்குமே இருந்ததில்லை. ஆனால் உன் ஒருவனின் உணவுத் தேவைக்காக எம் இனத்தையே காட்டிக் கொடுக்கத் துணிந்து விட்டாய். அதுவும் வேற்று இனத்தவரிடம். இதற்கு எம் விலங்கினத்தில் மன்னிப்பேயில்லை. யாவரும் ஒன்று கூடி திட்டமிட்டே உங்கள் கபட நாடகத்தை முறியடித்தோம் என்றது கொக்கோ.

உன் பிழைக்கு என்ன தண்டனை தெரியுமா? இந்தக் குகைக்குள் உணவு இல்லாமல் இருந்து இறக்கப் போகிறாய் என்று சொல்லிய கொக்கோ, மிங்கியின் கையை அன்போடு பற்றிக்கொண்டு வெளியேறியது.

ஏனைய நண்பர்கள் நரி மார்ஷை குகைக்குள் வைத்து இறுக்கமாகத் தாழிட்டனர்.

ஊ... ஊ... என ஈனக்குரலில் ஊளையிட்டது நரி மார்ஷ்.

உண்மையில் நீ புத்திசாலிதான் எனக் காதலுடன் கொக்கோவின் கன்னத்தில் முத்தமிட்டது மிங்கி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/children/story/p20.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License