இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுவர் பகுதி
கதை

மகிழ்வித்து மகிழ்

பாரதியான்


"அப்பா...ஒரு மணிக்கு கிளம்பினா ஆறுமணிக்கெல்லாம் அங்க போயிறலாமா?" ஆர்வத்துடிப்போடு கேட்டாள்,சங்கவி . காலை தினசரியை மடக்கி டீப்பாயில் வைத்ததும் நிமிர்ந்தான், முரளி .

"சொல்லுங்கப்பா..." சிணுங்கல்.

படுக்கையிலிருந்து எழுந்தவுடன் மகளிடம் ஆரம்பித்தது இந்த கேள்வி ,இன்னமும் தொடர்கிறது... அவனுக்கு கோபம் வரவில்லை, நகைப்புதான் முட்டியது.வெளிக்காட்டினால்... அவ்வளவுதான், சிடுசிடுப்பின் உச்சிக்கே சென்று விடுவாள்,சங்கவி. இதுதான் சமயமென வரிந்து கட்டி வந்து 'இந்த நொச்சல் தேவையா'ன்னு முறைப்பு காட்டுவாள் மனைவிரேணுகா.

பொறுமையின் துணைகொண்டு, மகளை தனது மடியில் அமர்த்தி, "ரேணுகா இங்க வா..." அழைக்க, சமையலறையிலிருந்து வந்து நின்றவள் 'என்ன...' என்பதாய் ஏறிட்டாள்.

அதிலேயே அனைத்து அர்த்தங்களும் பதிவாகி இருந்ததை புரிந்து, "புது மேனேஜர் கறார் பேர்வளி , விடுப்பெல்லாம் எடுக்க முடியாதும்மா." என்ற கணவனை மேலும் தொடர விடாது "அதான் சொல்றேன் இந்த வாட்டி கன்னியாகுமரி வேண்டாம்னு"என்றாள்.

குனிந்து மகளைப் பார்த்தான்,உடனே வெம்பிய காயென அவளின் முகம் சுறுங்கியிருந்தது.

"பிள்ளையோட வேகத்துக்கு கட்ட போடக்கூடாது. இவ மொகத்தப்பாரு"

அம்மா, பார்க்கவும், 'ஓ..ங்கூட கா..' என்பதாக கழுத்து சொடுக்கினாள்.

சங்கவி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, எப்போதும் முகமலர்ச்சி, தெளிவான வார்த்தைகளுடன் துறுதுறுப்பானவள்! ஆரம்பப் பள்ளியின் ஆண்டு விழாவில் அன்னை ஸ்ரீசாரதாதேவியின் வேசமிட்டு,மேடையேறி அவரைப்போல் முகபாவம் காட்டி, ஏக கைதட்டல் வாங்கிய உந்துதல், அடுத்தடுத்த வகுப்பின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் காந்திஜியாக, சுவாமி விவேகானந்தராக, காஞ்சிப் பெரியவராகத் தன்னை அடையாளப் படுத்த, அச்சம், கூச்சமென்பது அவளை விட்டு தூரம் போனமாதிரி, ஐந்தாமாண்டு விழாவில் பாரதி வேசத்தில் வந்து, 'அக்கினிச்குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொறு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்'என்ற பாட்டை மீசை முறுக்கும் செய்கை செய்து காட்டி வீரமாக பேசிவிட, சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த மாவட்டக் கல்வி அதிகாரி எழுந்து நின்று பாராட்டினார்.

பார்வையாளர்கள் வரிசையிலிருந்த, ரேணுகா விழிகள் கசிய,நெகிழ்ந்து, வீடு சென்றதும் கணவனிடம் கூறினாள்... மகளை வாரியணைத்து உச்சிமுகர்ந்த முரளி, அவளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக, வெளியிடங்களுக்கு சென்றுவரும்போதெல்லாம் அறிவு சார்ந்த நூல்கள் வாங்கியாந்து கொடுத்துப் படிக்கவும் தூண்டினான்.

வயதின் வளர்ச்சியோடு, கல்வித்தரத்தையும், அறிவுத்திறனையும், ஒழுங்கு நெறிகளையும் மேம்படுத்திக் கொண்ட சங்கவிக்கு, தேச பக்திப்பாட்டு, சட்டென சிந்தனையைத் தூண்டும் அறிஞர்களின் சிறு கருத்துக்கள், விழிப்புணர்வு வாசகங்கள், நீதிக்கதைகள் என எல்லாம் வாசித்த மாத்திரத்தில் மனதுக்குள் பதிவாகிக் கொள்ளும். தேவைப்படுகையில், அதை அப்படியே 'அச்'அசலாக்கும் ஞாபகக்காரியாகவும் இருந்தாள்.

பள்ளியில், விவேகானந்தா கேந்திரம் நடத்திய கிராமப் பண்பாட்டுப் போட்டியில், பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்டு, முதலில் மூன்றாம் பரிசுதான் வாங்கினாள். அடுத்தாண்டு,சுவாமி விவேகானந்தரின் வீர முழக்கம் பற்றிய ஒப்புவித்தல் போட்டி... அதில் முதலாவதாக வந்துவிட, மாவட்ட அளவில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றாள்!

பள்ளி முகப்பு அறிவிப்புப் பலகையில் சங்கவியின் பெயர்... ஒரே மகள் தனித்தன்மையுடன் வருவதில் பெற்றோருக்குப் பெருமை!

முரளி, ரேணுகாவுடன் அந்தப் பெரிய நகரின் உயர்நிலைப் பள்ளிக்குள் நுழைந்த போது, குவிந்திருந்த மாணவ, மாணவிகளைக் கண்டு,கொஞ்சம் துணுக்குற்ற மகளுக்கு 'இதோ பார் சங்கவி கழுதையில் மலையேறும் ஒருவன், ஒரு நீண்ட குச்சியில் கேரட் தழைகளைக் கட்டி, முன்னாடி காட்டியே கழுதையை நடக்க வைப்பானாம், அந்த மாதிரிதான் நம்மோட இலட்சியத்தை ஞாபகப்படுத்தியவாறே பயணப்படனும்' னு வைரமுத்து சொல்வார், என்ன புரியுதா?' கேட்டதும், அச்சம் தவிர்,தைரியம் சொன்னான்.

பகுதி வாரியாக முதல் தகுதியில் வந்த நபர்களில் சங்கவியும் தேர்வாகி விடவும், முகமெல்லாம் ஆனந்தமாய்ப் பெற்றோரைக் கட்டிக் கொண்டாள்.

அடுத்து, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர மையத்தில் போட்டி,

'சங்கவி கேந்திரப்போட்டியிலும் பரிசு வாங்கிரு, 'ம்' உனக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை, கண்டிப்பா வாங்கிருவ' தன்னுடைய வகுப்பு ஆசிரியையும், சக மாணவ,மாணவிகளும் நம்பிக்கையுறுதி கொடுத்தனர்.

அமைப்பாளர்,சங்கவி குறித்து நிறையப் பேசவும், கன்னியாகுமரிக்கும் மகளை அழைத்துப் போனார்கள், முரளியும்,ரேணுகாவும். அங்கே இரண்டாம் பரிசென்றாலும், தங்கியிருந்த இரு நாட்கள் அனுபவம், சங்கவியின் பேச்சு ஆர்வத்திற்குப் பட்டை தீட்டி விட, தொடர்ந்து வந்த வருடங்களிலும் கேந்திரப் போட்டிகளில் தவறாது தன்னை இணைத்துக் கொண்டாள்.



இம்முறையும் அப்படியே...

முரளியால் உடன் செல்ல முடியாத சூழ்நிலை. ரேணுகாவால் தனியாகச் செல்ல விருப்பமில்லை.

சென்ற முறை கன்னியாகுமரியில் நடந்த நிகழ்வு, அவள் மனத்திரையில் நிழலாடியது... நன்றாகத்தான் பேசினாள் சங்கவி, என்ன காரணமோ தெரியவில்லை, ஆறுதல் பரிசு நிலைக்கு தள்ளப்பட்டாள்..?தாள முடியாது, தேம்பித் தேம்பி அழுதாள்... கட்டுக்குள் மகளைக் கொண்டுவர, வெகுநேரம் சிரமப்பட்டதை வெளிக்காட்டவில்லை என்றாலும், முரளி உணராமல் இல்லை. ஆனாலும் மகளின் லட்சிய எண்ணங்களை, ஆர்வத்தை முறித்துப் போட முடியாதே...

"ரேணு... பன்னிரண்டு மணிக்கெல்லாம் கிளம்பிடு. பஸ் போக்குவரத்துல முன்ன,பின்ன இருந்தாலும் நேரம் சரியாகி விடும்" அவனைப் பொறுத்தவரை, மகளின் அவசரத்தை ஈடு செய்தால் போதுமென்றிருந்தது.

யோசித்தபடியே நின்றிருந்த மனைவியை கெஞ்சலாகப் பார்த்து, "துணைக்குதான் பூமணி அக்கா அவங்க பையனை கூட்டி வாராங்கல பிறகென்ன தயக்கம்? அடம் பிடிக்காம கிளம்பர வழியப்பாருமா" என்று பதிலுக்குக் காத்திராமல் 'சங்கவி கேந்திர பயிற்சி மையத்தில் நீ பேச வேண்டியதை அப்பாட்ட பேசிக்காட்டு...'ன்னு சங்கவியுடன் அறைக்குள் நுழைந்து கொண்டான்,

தங்கு தடையின்றி, ஒன்றுக்கு மூன்று முறை ஒப்புவித்தாள்! கடுகளவு சந்தேகமும் தேவை இல்லை. முதல் பரிசு நிச்சியமென உறுதி கொண்டான்.

விவேகானந்தா கேந்திர வாசலில் பேருந்து நிற்கவும், கிட்டத்தட்ட இறங்கிய அனைவரும் பயிற்சி மையத்தையே விசாரித்தனர். ஏற்கனவே வந்திருந்த அனுபவத்தில் ரேணுகாதான் வழிகாட்டியாக முன் சென்றாள்.

அந்த நடை நேரத்திலேயே சினேகம் பிடித்துவிட்டாள் சங்கவி. ஒத்த வயசு பெண்ணின் பெயர், செல்வி, ஊராட்சிப்பள்ளியில் படித்தவள் பேச்சிலும், நடப்பிலும் கிராம வாசனை இருக்க, அதையவள் ரசிக்க, ஆச்சரியப்பட்டாள் செல்வி. இருவருமே ஒரே போட்டிக்குரியவர்கள். தனித்தனியாக போய் மனப்பாடம் செய்து கொண்டனர். பிற சமயங்களில் ஒன்றாகவே வளம் வந்து, குறுகிய பழக்கத்திலே நட்பை விரிவு படுத்திக் கொண்டு, நீண்ட நாள் பரஸ்பரமானவர்கள் போல், கைகள் கோர்த்துக் கொண்டு திரிந்தனர்.

அதிகாலை பஜனை, தேச பக்திப் பாடல்கள்... ஆன்மிகவாதிகளின் கருத்துச் சுவைகள்... கேந்திர கிராம பண்பாட்டு மையத்தின் சேவைகள் பற்றிய,பொறுப்பாளரின் விரிவாக்கம்...கலை நிகழ்சிகள்... பெரியவர் கலந்துரையாடல்கள்... கேள்வி - பதில்கள்... மாணவ,மாணவிகளுக்கு அறிவுப்பூர்வ விளையாட்டுக்கள்... தனித்திறன் போட்டிகள் எல்லாம் ஒவ்வொருவருக்குள்ளும் ஜன்னல் திறந்த குளிர்ந்த காற்றாய் புகுந்து சிலிர்ப்பூட்டியது.

மறுநாள் சூரியோதயம் பார்த்த பின், வளாக வினாயகர் கோவிலில் தரிசனம்,கேந்திர நிறுவனர் மா.ஏக்நாத்ஜியின் இல்லம் செல்லுதல், சுவாமி விவேகானந்தர் வரலாற்றுப் புகைப்படக் காட்சி பார்த்தலைத் தொடர்ந்து இயற்கை முறை வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற செயற்கையிலான தோட்டம், குடில்கள்,சுடாத செங்கல் வீடுகள், மழை பெய்யும் காட்சி, அறிவியல் கூடம்... அனைத்தும் பிரமிப்பாக இருந்தது.



மதியம் நான்கு மணி.

இசைப் பாட்டு பாடுதல், கதை சொல்லுதல், கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், ஒப்புவித்தல் போட்டியெல்லாம் தனித் தனியான அரங்குகளில் துவங்கியது.

நூல் கோர்த்த வெண்மணிகலென மாணவ,மாணவிகள் தங்களின் தனித் திறமைகளை காட்டினார்கள். மாணாக்களின் மேம்பாடு, நடுவர்களையே திகைக்க வைத்தது. துளியளவு வித்தியாசத்தில்தான் தரம் பிரிக்க முடிந்தது.

போட்டிக்களத்திலே, சங்கவியும் செல்வியும் பேசி முடித்தபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் நடுநிலையான கருத்தையே யோசித்தனர் என்றாலும் ரேணுகாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை,மனசு குழம்பியது.

'என்ன ரேணு சங்கவி சிறப்பா பேசிட்டாளா..?' அலைபேசியில் கணவன்.

'நம்ம பொண்ணுக்கென்னங்க அரங்கம் அதிர வீர முழக்கமிட்டா' என்று மனைவி,சொல்வாள்னு எதிர்பார்த போது 'ம் பேசினா' என்ற அவளின் ஒற்றை சொல் என்னமோ செய்ய, இணைப்பைத் துண்டித்துக் கொண்டான். சங்கவியோ, செல்வியுடன் சேர்ந்து பகவதியம்மன் கோவில், படகிலேறி சுவாமி விவேகானந்தர் பாறை, அய்யன் திருவள்ளுவர் சிலை, கண்டு சிரிப்பும், சந்தோஷமுமாக, சிட்டுக்குருவியென சுற்றி வந்தாள்... வெளிச்சமானதுதான் மகளின் முகம்... பரிசுக்குரியவர்களை அறிவிக்கும் வரை இருண்டே இருக்குமே... இப்போதென்ன நிறைய மாற்றத்தோடு..?

தான் கலந்து கொண்ட போட்டியின் இறுதி முடிவு எதுவாக இருந்தாலும் வருத்தமில்லை என்னும் படியாகவே அவளின் அச்செயல் உணர்த்தியது ரேணுகாவுக்கு.

இரண்டு நாட்கள் நிகழ்ச்சியின் நிறைவுப் பகுதி... சிறப்பு விருந்தினர்கள் உரை. பரிசுகள் விபரம் அறிவிப்பை அடுத்து, கேந்திர நூல்களை முக்கியஸ்தர் வழங்க, கரவொலியுடன் வணங்கி, உரியவர்கள் பெறுதல், புகைப்படம் பிடித்தல் என அரங்கு அதிர்ந்தது.

".....முதல் பரிசு செல்வி..."

கொஞ்சமும் எதிர்பாராதது. பொங்கிவிட்ட செல்விக்கு ஆனந்தத்தில் விழியோரங்களில் நீர்த் தேக்கங்கள்! முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த, மகளை ரேணுகா கவனிக்க, அவளும் திரும்ப பெரிய ஆச்சரியம்... எந்த சலனமும் இல்லாது, வழக்கமான முகமலர்ச்சியுடன் புன்னகை காட்டிக் கைத்தட்டி ஆர்ப்பரித்தாள்... தனக்கு இரண்டாவது இடமே என்ற போதும் துள்ளிக் குதித்துப் போய் பரிசு பெற்ற கையோடு, கைகுலுக்கி செல்விக்கு வாழ்த்தும் கூறினாள்! நடப்பவைகள் அனைத்தும் உண்மைதானா..?

அதிசயமாயிருக்கே... நம்புவதற்கு கொஞ்சம் நேரமானது.

ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில், "சங்கவி நீ நல்லாத்தானே பேசின...ரெண்டாம் பரிசுனாலும் மனப்பூர்வமா ஏத்துக்கிட்டேயே எப்படி..?" கேட்ட அம்மாவின் அருகில் அமர்ந்ததும், "செல்வி ரொம்ப நல்லவம்மா கிராமப் பகுதியில் இருந்து வந்திருக்கா... என்ன மாதிரி மேடையார்வமானவள்னு அவளோட பேச்சிலயே நான் தெரிஞ்சிக்கிட்டேன், ஊர் பள்ளி போட்டில முதலா வந்த போதும் இங்க வாரதுக்கு அவங்க வீட்ல சம்மதிக்கலேயாம் அமைப்பாளர்தான் கூட்டி வந்திருக்கார். அப்படிப்பட்டவ முதல் பரிசோட போனாள்னா அவங்க வீட்லேயும், பள்ளியிலேயும் பாராட்டுவாங்கள்ள... செல்விக்கும் அதிகப் பெருமையா இருக்கும். அதுவுமில்லாம விவேகானந்தா கேந்திரத்தோட நன்னெறிகள், தொண்டு,சேவைமனப்பான்மை சிறப்புகள் எல்லாம் அந்த ஊர்ப் பள்ளிகளுக்கும் தெரியும் போது, அடுத்த போட்டிகளிலும் முன் வந்து மாணவ,மாணவிகள் கலந்துக்குவாங்கனு நெனச்சுத்தான் போட்டியில் ஒப்புவிக்கையில் தெரிந்தே சின்னதா எச்சில் முழுங்கி, நிறுத்திப் பின்வாங்கினேன் " பெரியதனமாக பேசிக் கொண்டு போனவளை, புருவம் விரியப் பார்த்தவாறே ரேணுகா இருக்க.



மேலும் சங்கவி, "அம்மா பஸ்ல வரும்போது ஒரு இடத்துல 'மகிழ்வித்து மகிழ்' ன்னு ஒரு வாசகம் படிச்சேன் அப்ப எனக்கு அதன் அர்த்தம் புரியலதான். ஆனா செல்விக்கு இந்த விட்டுக்கொடுத்தலில் அதை அழுத்தமா உணர்ரேம்மா. அதுவுமில்லாம செல்வி ரெண்டாவது, மூணாவதோ பரிசுடன் போறதை விட முதல் தரமாப் போறதுல ஏதோ வானத்தையே பிடிச்ச மகிழ்ச்சியா இருக்காள்ல, அத நெனைக்கையில் எனக்கும் கூட மகிழ்ச்சியா இருக்குல"

இவ்வளவு பக்குவத்திற்கு வந்து விட்டாளா... மொத்தமாய் மகளை கட்டிக் கொண்டாள்,ரேணுகா.

சாதாரண நேரத்தில் பிசிறில்லாது அருமையாக வாசித்த பெண் போட்டியின் போது நடுவர்கள் முன்னால் எதற்காகத் தடுமாறினாள்... சென்ற நிகழ்ச்சியில் அழுது, ஆர்ப்பாட்டம் செய்தது போல் இல்லாது, கலங்காது இருக்கிறாளே... எப்படி? என விசாரிக்க வந்த அமைப்பாளர் வாசலில் நின்று அனைத்தும் கேட்டு, நெகிழ்ந்த கையோடு, அலைபேசியில் முரளியை அழைத்துச் சங்கவியின் வயது மீறிய வார்ப்பு வார்த்தைகளை பெருமை நிரம்ப நிரம்ப விவரித்ததும், 'நாம் நிற்கும் இடத்தைப்பொறுத்தே தன்மைகள் வரும் என்பது பெரியவர் சொல்! உங்க பொண்ணு சந்தனம் அரைக்கிற தளத்தில் இருக்கா, அதான் மணம் கமழ்கிறாள்... சமுதாயத்தில் உங்க பொண்ணு உயர்ந்த நிலைக்கு வருவாள் வாழ்த்துக்கள்...' என்றார் உணர்ச்சி மேலிட்டு.

மகள் சங்கவி குறித்து நிறைகுடமான மனதுடன் இப்போது ரேணுகா...

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/children/story/p7.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License