* தாமரை மலரின் ஆங்கிலப் பெயர் Lotus, அதன் தாவரவியல் பெயர் நெலும்பியன் நியூசிஃபெரா ( Nelumbian Nucifera)
* தாமரை இந்தியாவின் தேசிய மலராக 26 ஜனவரி 1950 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
* இந்தியாவைத் தவிர, தாமரை வியட்நாமின் தேசிய மலராகவும் இருக்கிறது.
* பௌத்தத்தில் தாமரை புனிதமான மலராகக் கருதப்படுகிறது.
* எகிப்திலும் தாமரை மலர்கள் சூரிய கடவுளின் அடையாளமாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது.
* தாமரை மலரைச் சுற்றியுள்ள வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டாலும், தாமரை மலரின் வெப்பநிலை 30°C முதல் 35°C வரை (86°F முதல் 95°F வரை) இருக்கும்.
* வடகிழக்கு சீனாவில் உள்ள வறண்ட ஏரியின் அடிப்பகுதியில் பழமையான தாமரை மலர் விதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.