துணை வரும் பனை மரம்
ஓங்கிய பனைமரம் இங்கு
உவந்து கொடுக்கும் நுங்கு
தாங்கி இருக்கும் குளிர்ச்சி
தருமே மனத்துள் மகிழ்ச்சி
வாங்கி சுவைப்போம் உருஞ்சி
வற்றும் கோடை தளர்ச்சி
தேங்கிய சுவையை அருந்தி
தெருவில் ஓட்டுவோம் வண்டி
எங்கும் மரங்கள் வளர்ப்போம்
இயற்கை நலங்கள் சுவைப்போம்
பங்காய் விதைகள் ஊன்றி
பணியில் உயர்வோம் தாண்டி
நிற்கும் புயலைத் தடுத்து
நிலைக்கும் இயற்கை செழித்து
விற்கும் மனிதர் வளர்க
விளைக்கும் தூயோர் வாழ்க
- கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ, நீர்முளை, திருக்குவளை வட்டம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.