பறவை மேடை
எங்கள் வீட்டு மாடியிலே
அமைத்தேனே ஒரு மேடை
பறவைக்கான உணவும் நீரும்
வைக்கும் அது பறவை மேடை.
காகம் முதலில் வந்தது
கரைந்து கரைந்து சாப்பிட்டது
அடுத்து வந்தது சிட்டுக்குருவி
அமைதியாகச் சாப்பிட்டது.
பயந்து பயந்து சாப்பிட்ட
பறவையெல்லாம் இன்று
என்னைப் பார்த்துச் சொன்னது
நன்றி நண்பா என்று.
பறவையைப் பார்த்து அணிலுமே
அங்கே வந்தது சாப்பிட
காக்கையைப் பார்த்து பயந்தது
கடைசியில் நட்பாய் ஆனது.
வெயில் காலம் வந்தாலே
பறவையெல்லாம் வாடுது
தாகம் தீர்க்க தண்ணீரின்றி
தேடித் தேடிப் பறக்குது.
சோறு கொஞ்சம் நீரு கொஞ்சம்
சேர்த்து வை பறவை மேடையிலே
நன்றி சொல்லும் பறவையெல்லாம்
பார்த்து ரசிக்கலாம் நீயுமே..!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.