ஒன்று முதல் பத்து
ஒன்றும் ஒன்றும் இரண்டு
ஒன்றுமில் லாததற்குக் காட்டாதே முரண்டு
இரண்டும் இரண்டும் நான்கு
இறைவனை நினைத்து வணங்கு
மூன்றும் மூன்றும் ஆறு
முயற்சியோடு வாழ்வில் முன்னேறு
நான்கும் நான்கும் எட்டு
நல்லது அல்லாதவைகளை விரட்டு
ஐந்தும் ஐந்தும் பத்து
ஐயமின்றி எதையும் செயல்படுத்து
ஆறும் ஆறும் பனிரெண்டு
அனைவரிடமும் ஆதரவை வேண்டு
ஏழும் ஏழும் பதினான்கு
ஏழைக்கு என்றும் மனமிரங்கு
எட்டும் எட்டும் பதினாறு
எல்லோரிடத்திலும் அன்பாயிரு
ஒன்பதும் ஒன்பதும் பதினெட்டு
ஒற்றுமையின் பலத்தை உணர்ந்திடு
பத்தும் பத்தும் இருபது
படிப்பில் மகிழ்ந்து இருப்பது
- சரஸ்வதி இராசேந்திரன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.