பற்றுவை பாப்பா
அன்னையிடம் பற்றுவை பாப்பா
அவருக்கிணை இவ்வுலகில் யாருமில்லை பாப்பா.
தந்தையிடம் பற்றுவை பாப்பா
தரணியை வென்றிடுவாய் பாப்பா.
ஆசானிடம் பற்றுவை பாப்பா
கோடி நன்மைகள் வந்தடையும் பாப்பா.
மரங்களிடம் பற்றுவை பாப்பா
பிறர்க்கு உதவும் குணம் பெற்றிடுவாய் பாப்பா.
எறும்பின் மீது பற்றுவை பாப்பா
சுறுசுறுப்போடு சேமித்துவாழக் கற்றிடுவாய் பாப்பா.
விலங்குகளிடம் பற்றுவை பாப்பா
நன்றியுள்ளம் கொண்டிடுவாய் பாப்பா.
இயற்கை மீது பற்றுவை பாப்பா
தன்னலமின்றி வாழக் கற்றிடுவாய் பாப்பா.
உழைப்பின் மீது பற்றுவை பாப்பா
வாழ்வில் உயர்வை நாளும் அடைந்திடுவாய் பாப்பா.
பூமி மீது பற்றுவை பாப்பா
பொறுமைமிகு மனிதனாக நிலைத்திடுவாய் பாப்பா.
இறைவனிடம் பற்றுவை பாப்பா
மனிதநேயமுள்ள மனிதனாக வாழ்ந்திடுவாய் பாப்பா.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.