பேரம் பேசாமல் வாங்குவோம்...!
நுங்கு நுங்கு நுங்கு
கற்பகத் தருவான பனை தரும்
அற்புதக் கொடையே நுங்கு
கோடைக் காலத்தில் கிடைக்கும் நுங்கு
உடல் வெப்பம் தணிக்கும் நுங்கு
சத்துக்கள் நிறைந்த நுங்கு
சகலரும் விரும்பும் நுங்கு
நீர்ச்சத்து நிறைந்த நுங்கு
நீடித்த சுவையுடைய நுங்கு
பதனீரில் போட்டும் பருகலாம்
குளிர்பானங்களில் சேர்த்தும் குடிக்கலாம்
பாயசம் கூடச் செய்யலாம்
பாலகரும் பாட்டியும் கூடத் தின்னலாம்
நுங்கு தின்ற கூந்தலில்
நுங்கு வண்டி செய்யலாம்
தெருவில் ஓட்டி மகிழலாம்
செலவு இல்லா வண்டியிது
சிறுவர் விரும்பும் வண்டியிது.
பனை மரங்களில் ஏறி
வெட்டி வந்து விற்கும் நுங்கினை
பேரம் எதுவும் பேசாமல் வாங்குவோம்...
பனைத் தொழிலாளி வாழ்க்கைக்கு உதவுவோம்...!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.