மாமரி பாலன் பிறந்தார்!
பாலன் பிறந்தார் பாலன் பிறந்தார்
பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில்
வானவர் எல்லாம் வந்து சொன்னார்
மேய்ப்பருக்கு அவர் பிறந்த செய்தியை
மகிழ்ச்சியூட்டும் பிறப்பைக் காண
மேய்ப்பர்களும் புறப்பட்டனர்...!
வானில் தோன்றிய வால் நட்சத்திரமும்
உலகுக்கு சொன்னது உன்னதர் செய்தியை
நட்சத்திரத்தைத் தொடர்ந்து வந்தனர்
ஞானிகள் மூவரும் பாலனை காணவே
மன்னன் ஏரோதையும் கண்டு விசாரித்தனர்
பாலன் பிறந்த இடத்தை அறிந்தனர்...!
பின்தொடர்ந்த ஞானிகளுக்கு நின்று காட்டியது
வழிகாட்டிய நட்சத்திரமும் கொட்டிலின் மேலே
மாட்டுக் கொட்டிலில் முன்னணையில் படுத்திருந்த
மாமரி பாலனைக் கண்டு பணிந்தனர்
கொண்டு வந்த பொன் வெள்ளியோடு
தூபவர்க்கத்தையும் படைத்து வணங்கினர்...!
பாலனைப் பணிந்த ஞானியர் மூவருக்கும்
ஏரோதின் எண்ணத்தை தூதரும் சொன்னார்
வேறுவழியாய் மூவருமே ஏகிநடந்தார்
அன்னை மரி பாலனுமே அழகாய் வளர்ந்தார்
மானிடரெல்லாம் மகிழ்வாய் வாழ
தேவ செய்தியைச் சொன்னார்...!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.