கேரட் சாப்பிடுவோம்…!
கேரட் கேரட்
சத்து நிறைய உள்ள காய்
எல்லாப் பருவங்களிலும் கிடைக்கும் காய்
எல்லோரும் சாப்பாட்டில் சேர்த்திடுவோம்...!
கண்பார்வை தெளிவடையும்
கூர்மையாகக் காட்சி தெரியும்
சருமம் பளபளத்திடும்
விருப்பமுடன் தினமும் உண்போம்...!
சத்துக்கள் நிறைய உண்டு
சாப்பிட ருசியும் இருக்கும்
உடலுக்குப் புத்துணர்ச்சியினைத் தரும்
உணவில் அன்றாடம் சேர்க்கலாம்...!
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்
விதைத்திட்ட பலன்கள் பெறலாம்
நல்லதைத் தேடி உணவாக்கிடலாம்
நாலு பேருக்குத் தந்து உதவலாம்...!
குழந்தைகளின் எலும்பு பலப்படும்
தினந்தோறும் சுறுசுறுப்பினை தரும்
இதனை வேகவைத்தும் சாப்பிடலாம்
பச்சையாகவும் சாப்பிடலாம்...!
- ஆர். எஸ். பாலகுமார், சென்னை.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.