சேரிடம் அறிந்து சேர்
சேரிடமே நம்மை செம்மை செய்யும்
செழிப்பான வாழ்வுக்கு அழைத்துச் செல்லும்...
அறிவார்ந்த சிந்தை கொண்டோர் வழிநட
அகிலத்தை அறிய அதுவே ஒளியாம்…
நல்லோருடன் பயணிக்க நன்மை வந்தடையும்
தீயோரைத் தொடர தீமையே பிறக்கும்…
தூய நதியோடு பயணமே இனிக்கும்
மலரோடு சேர்ந்த பொருளே மணக்கும்…
நல்லோர் நட்பு வாய்ப்பது அரிது
கிடைத்த நட்பை தொடர்வது அறிவு…
எண்ணம், செயல் தூய்மையுடையோர் நட்பை
எவ்விலை கொடுத்தேனும் பாரினில் தொடர்க…
நல்வாழ்வு நானிலத்தில் பெற்றிட நாளும்
நல்லோர் நட்பை தேடிப் பெற்றிடு…
வாழ்வின் உயர்வுக்கும், மகிழ்வுக்கும் என்றும்
சேரிடம் அறிந்து சேர்…
- ம. அமிர்தா தமிழரசன், தேனி.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.