மிதிவண்டிப் பயணம்
இரு கால்களில் மிதிப்பதால்
இரண்டு சக்கரங்களும் சுழலுது!
மிதியின் வேகம் கூடினால்
மிதிவண்டியின் வேகம் கூடுது!
மிதியின் வேகம் குறைந்தால்
மிதிவண்டியின் வேகம் குறையுது!
மிதித்து வண்டி ஓட்டினால்
உடலுக்கு நலம் கிடைக்குது!
எரிபொருள் எதுவும் இல்லாமல்
எந்தச் சாலையிலும் ஓடுது!
பராமரிப்பு எனும் பெயரில்
அதிகச் செலவுகள் இருக்காது!
சாலையில் ஓடும் ஓட்டத்தால்
சுற்றுச்சூழல் எதுவும் பாதிக்காது!
பாதிப்பு ஏதும் இல்லாமல்
பயணம் சிறக்க உதவுது!
வயதுப் பாகுபாடு இல்லாமல்
ஓட்டி மகிழும் வாகனம் இது!
- ஆர். எஸ். பாலகுமார், சென்னை.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.