சாக்லேட் சப்பாணி
கடலை உருண்டை கெட்டிக்காரி,
கடித்துத் தின்பான் பலசாலி.
எள்ளு உருண்டை சின்னக்காரி,
எடுத்துத் தின்ன எலும்புறுதி!
பொட்டுக் கடலை பொரிக்காரி,
புரதம் சேர்க்கும் முத்துக்காரி!
பொருள் விளாங்காநல் சத்துக்காரி,
பொடித்துத் தின்னப் பல்லுறுதி!
பச்சைப் பயறு பந்துக்காரி,
பசியைப் போக்கும் சொந்தக்காரி!
சுக்குக் கருப்பட்டி வெல்லக்காரி,
சுகமே தருவாள் கெட்டிக்காரி!
சொக்காய்ப் போட்ட சட்டக்காரி,
சொகுசாய் மயக்கும் திட்டத்தாரி!
சாக்லெட் என்பது சப்பாணி,
சாப்பிடப் பற்கள் சொத்தையாயிடுமே!!
- இரா. இராஜாமணி, ஈரோடு.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.