இணையப் பயன்பாட்டின் வேகம்
உ. தாமரைச்செல்வி
நாம் இணைய இணைப்பிற்கு பயன்படுத்தும் இணையச் சேவையின் சோனார் துடிப்பு (Ping), இறங்கு நிலை (Download) மற்றும் ஏறும் நிலை (Upload) வேகம் போன்றவைகளை எளிதில் கண்டு கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்திற்குச் சென்றவுடன் கணினி ஒன்று நம் பார்வைக்குக் கிடைக்கிறது. இதன் கீழ்பகுதியின் இடதுபுறத்தில் நாம் பயன்படுத்தும் விதிமுறை இலக்கம், இணையச் சேவை நிறுவனம் போன்றவையும் தானாகவே கிடைக்கும்.
இந்தக் கணினியின் திரையில் தோன்றும் “சோதனையைத் தொடங்கு” (Begin Test) எனுமிடத்தில் சொடுக்கினால் போதும். சிறிது நேரத்தில் நாம் பயன்படுத்தும் இணையச் சேவையின் சோனார் துடிப்பு (Ping) அளவு முதலில் கிடைக்கும். இரண்டாவதாக இணையச் சேவையின் இறங்கு நிலை (Download) வேகம், அதன் பின்பு ஏறும் நிலை (Upload) வேகம் போன்றவை அடுத்தடுத்து தனித்தனிக் கட்டங்களில் கிடைக்கும்.
அதன் பிறகு தங்கள் இணையச் சேவையை மாற்றிக் கொள்ள விரும்பினால் அதற்கான தனிப்பக்கம் கிடைக்கிறது.
தங்கள் இணையச் சேவையின் வேகத்தை இப்போதே கண்டு கொள்ளுங்கள்.
இணையதள முகவரி:
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.