தட்டச்சில் சிறப்புக் குறியீடுகள்
உ. தாமரைச்செல்வி
கணினியில் தட்டச்சு செய்யும் போதோ அல்லது மின்னஞ்சல் செய்யும் போதோ நமக்கு ஒரு சில குறியீடுகள் தேவையானதாக இருக்கும். ஆனால் அந்தக் குறியீடுகள் நம் கணினியின் தட்டச்சு விசைப்பலகையில் இல்லாமல் இருக்கும். அல்லது அந்தக் குறியீடு எந்த எழுத்துருவில் இருக்கும் என்று ஒரு தேடுதல் வேட்டையைத் தொடங்க வேண்டியிருக்கும். இதனால் தட்டச்சு செய்யும் நமக்கு தேவையில்லாமல் கால விரயமும் ஆகக் கூடும்.
இது போன்ற சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் அனைத்து வரியுரு (All Character), அகரமுதலி வரிசை (Alphapetical Order), அம்புக்குறியீடு (Arrow), செம்மையுடையன (Classical), நாணயம் (Currency), வரைப்பட விளக்க வடிவங்கள் (Graphic Shapes), கணிதம் (Mathematical), எண்கள் (Numerals), நிறுத்தக் குறிகள் (Punctuations), குறியீடுகள் (Symbols) என்பது போன்ற தலைப்புகளின் கீழ் பல சிறப்புக் குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன.
இவற்றிலிருந்து தேவையான குறியீடுகளை மேலுள்ள தலைப்புகளில் இருந்து விரைவாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது.
இங்கிருந்து பிரதி (Copy) செய்து நமக்குத் தேவையான இடத்தில் ஒட்டிக் (Paste) கொள்ளலாம்.
இந்த விசயம் தெரியாமல் பல நாட்கள் வீணாகப் போனது என்று புலம்பும் சிலருக்காக...
இணையதள முகவரி:
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.