இலவச எழுத்துருக்கள்
உ. தாமரைச்செல்வி
நம் கணினியில் குறிப்பிட்ட அளவு எழுத்துருக்கள் இருந்தாலும் புதிது புதிதாக எழுத்துரு அமைத்து நம் தட்டச்சு செய்த கடிதங்கள் அல்லது தகவல்கள் பார்க்கப் புதுமையாகவும் பளிச்சென்றும் இருக்க வேண்டும் என்றும் விரும்புவோம்.
இதற்காகவே ஒரு இணையதளம் இலவசமாய் எழுத்துருக்களை உங்களுக்கு அளிக்கிறது.
இந்த இணையதளத்தில் பல்வேறு வகையான எழுத்துருக்களில் சுமார் 716 எழுத்துருக்கள் இருக்கின்றன.
இந்த எழுத்துருக்களில் உங்களுக்குப் பிடித்தமான எழுத்துருக்களைத் தாராளமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு எழுத்துருவின் வலதுபுறத்தின் கீழ்பகுதியில் தரவிறக்கம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான சிறப்பு எழுத்துருக்கள், சிறிய வடிவிலான படங்களைக் கொண்ட எழுத்துருக்கள் என இதில் நிறைய இருக்கிறது.
புதிய எழுத்துருக்களை விரும்புபவர்களுக்கும், கணினியில் தட்டச்சு செய்து கொடுக்கும் தொழிலில் இருப்பவர்களுக்கும் இந்தத் தளம் உதவக்கூடும்.
இணையதள முகவரி:
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.