மின்னஞ்சல் முகவரியைப் படமாகப் பெறலாம்
உ. தாமரைச்செல்வி
மின்னஞ்சல் முகவரியைத் தட்டச்சு செய்து கொண்டிருப்பதை விட அதை அப்படியே படமாக்கி இணைத்து விட்டால் பார்ப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் எளிமையாக இருக்குமே என்றுதானே சிந்திக்கிறீர்கள்...
இனி அந்த சிந்தனையைக் கைவிடுங்கள்... இதற்கும் ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் உள்ள காலிப்பெட்டியில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்யுங்கள். அருகிலுள்ள படம் உருவாக்கு எனும் பொத்தானைச் சொடுக்குங்கள். அவ்வளவுதான்!
உங்கள் மின்னஞ்சல் முகவரி படமாகத் தயார். இந்தப் படத்தை அப்படியே கணினியில் சேமித்துக் கொள்ளலாம். வலைப்பூ, இணையதளம் வைத்திருப்பவர்கள் இந்த முகவரியை எளிமையாகத் தளங்களில் சேர்த்துக் கொள்வதற்கான குறியீட்டுக் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.
என்ன? உங்கள் மின்னஞ்சல் முகவரியை படமாக்கப் விரும்புகிறீர்களா? இதோ... உங்களுக்காகவே...
இணையதள முகவரி:
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.