வேர்டு கோப்பு மாற்றம்
உ. தாமரைச்செல்வி
தங்கள் கணினியில் 2007 ஆண்டுக்குப் பின்னாலான மென்பொருள் பயன்பாட்டுக்குப் பின்பு எம்.எஸ். வேர்டு கோப்புகள் .docx கோப்புகளாக இருக்கின்றன. 2007க்கு முன்பிருந்த மென்பொருள் பயன்பாட்டில் இருக்கும் கணினிகளில் வேர்டு கோப்புகள் .doc கோப்புகளாக இருக்கும். 2007க்கு முந்தைய மென்பொருள் பயன்பாட்டிலிருக்கும் கணினிகளில் .docx கோப்புகளைத் திறந்து பார்க்க முடியாமல் தவிக்க நேரிடும்.
இந்த .docx கோப்புகளை .doc கோப்புகளாக இணைய வழியில் இலவசமாக மாற்றித்தரும் ஒரு இணையதளம் உள்ளது.
இந்த இணையதளத்தில் இருக்கும் நிலை 1 என்பதன் வலதுபுறத்தில் இருக்கும் உலாவுதல் (Browse) எனும் பொத்தானைச் சொடுக்கித் தங்கள் கணினியிலிருக்கும் .docx கோப்புகளை தரவேற்றம் (upload) செய்யுங்கள்.தற்போது தாங்கள் பதிவேற்றம் செய்த .docx கோப்பு சில நிமிடங்களில் .doc கோப்புகளாக மாற்றம் செய்யப்பட்டுவிடும். இப்படி மாற்றம் செய்யப்பட்ட கோப்புகளை நிலை 2 என்பதன் வலதுபுறத்தில் இருக்கும் தரவிறக்கம் (Download) எனும் பொத்தானைச் சொடுக்கி தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
கோப்பு மாற்றங்களைச் செய்ய விரும்புபவர்களுக்காக...
இணையதள முகவரி:
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.