நாய்க்குட்டிகளுக்கான தளம்
உ. தாமரைச்செல்வி
தற்போது பலருக்கும் நன்றி மறப்பது என்பது வாடிக்கையாகப் போய்விட்டது. ஆனால் நாய் மட்டும் இன்னும் நன்றியுடையதாகத் தன் பதவியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. எனவே நாய்க்குட்டி வளர்ப்பில் அக்கறை காட்டுபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
இந்த இணையதளத்தில் நாய்க்குட்டிகளின் வகைகள் தனித்தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் அந்த வகையைச் சேர்ந்த பல நாய்க்குட்டிகளின் படங்கள் அவற்றின் பெயர் வாரியாக ஆங்கில அகர வரிசையில் (Alphabet) இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப்பட்டியலில் பல வகையான பல பெயர்களிலான நாய்க்குட்டிகளை நாம் பார்வையிட முடிகிறது.
இந்த நாய்க்குட்டிகளில் சிறப்பு பெற்றவை குறித்த தகவல்கள் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன. இந்தத் தளத்தில் நம் வீட்டில் இருக்கும் நம் செல்ல நாய்க்குட்டிகளின் படங்களையும் இணைக்க முடியும். அதற்கான வசதியும் அளிக்கப்பட்டிருக்கிறது.
என்ன உங்கள் வீட்டுச் செல்ல நாய்க்குட்டிகளின் படத்தைப் பதிவேற்ற முடிவு செய்து விட்டீர்களா? அப்படியானால்...
இணையதள முகவரி:
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.