உங்கள் சொல்லைக் குரலாக மாற்றலாம்!
உ. தாமரைச்செல்வி
நாம் பயன்படுத்தும் சொற்களைத் தட்டச்சு செய்து அதைக் குரலாகக் கேட்க முடியுமா? என்றுதானே கேட்கிறீர்கள்... ஆமாம் அந்த சொற்களை உச்சரிக்கச் சொல்லிக் கேட்க முடியும்
இதற்கும் ஒரு இணையதளம் உதவுகிறது
இந்த இணையதளத்தில் காலிப்பெட்டி ஒன்று உள்ளது. இந்தக் காலிப்பெட்டியினுள் நாம் உச்சரிக்க வேண்டிய சொற்களை அப்படியே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கொள்ள வேண்டும்
தமிழ்ச் சொற்களை தமிழ்ங்கிலிஷாக - எழுத்துப் பெயர்ப்பு முறையில் (Transliteration Method) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கொள்ளலாம்.
அதன் பிறகு காலிப்பெட்டியின் மேலுள்ள ஆண் குரல், பெண் குரல் என்பதில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் காலிப்பெட்டியின் கீழுள்ள எம்.பி3 ல் உருவாக்கு எனுமிடத்தில் சொடுக்கினால் போதும்.
நீங்கள் தட்டச்சு செய்த சொற்களை நீங்கள் தேர்வு செய்த குரலில் எம்.பி3ல் கேட்க முடியும். இந்தக் குரலை தங்கள் கணினியில் சேமிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இணையதளங்களுக்கும், உலாவிகளுக்கும் (Browser) குரல் மாற்றம் செய்யும் வசதிகளும் இத்தளத்தில் உள்ளன.
என்ன உங்கள் சொற்களைத் தட்டச்சு செய்து மாற்றுக் குரலில் கேட்க விருப்பமா? அப்படியானால் உங்களுக்காக...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.