திரைப்படத்தில் நடிக்க விருப்பமா?
உ. தாமரைச்செல்வி
நம்மில் பலருக்கும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும். ஒரு காட்சியிலாவது தலையைக் காட்டி விட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது...
ஊரின் முக்கிய இடத்தில் நீங்கள் நடித்த உங்கள் படத்துடன் கூடிய திரைப்பட சுவரொட்டி ஒட்டப்பட்டால் எப்படி மகிழ்ச்சி அடைவீர்கள்?
உங்கள் மகிழ்ச்சிக்கு, உங்கள் படத்துடன் கூடிய சுவரொட்டியை, உங்களுக்கு விருப்பமான தலைப்பில் உருவாக்க ஒரு இணையதளம் உதவுகிறது
இந்த இணையதளத்தில் இருக்கும் பதிவேற்றம் எனுமிடத்தில் சொடுக்கி நீங்கள் விரும்பும் படத்தை உள்ளீடு செய்யுங்கள். படமிருக்க வேண்டிய பகுதி, அதில் இடம் பெற வேண்டிய எழுத்துக்களின் நிறம், எழுத்துருக்கள் போன்றவற்றைத் தேர்வு செய்யுங்கள்
அதன் பிறகு படத்தின் தலைப்பு, அந்தத் தலைப்பிற்கு ஏற்ற கூடுதல் வாக்கியங்களையும் சேர்த்து விடுங்கள்.
கீழுள்ள இரு காலிப்பெட்டிகளில் நடிப்புக்குக் கூடுதல் தகவலை ஒரு பெட்டியிலும், திரைப்படத் தயாரிப்பில் இருப்பவர்கள் குறித்த தகவல்களை மற்றொரு பெட்டியிலும் உள்ளீடு செய்யுங்கள்
பின்னர் திரைப்படம் வெளியாகும் தேதியை அதற்கான கட்டத்தில் உள்ளீடு செய்து கீழுள்ள உருவாக்கு எனுமிடத்தில் சொடுக்கினால் போதும்.
உங்கள் நடிப்பில் வெளியாகும் படத்திற்கான சுவரொட்டி தயாராகி விடும். இதனை உங்கள் கணினியில் சேமித்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துங்கள்
திரைப்படத்தில் நடிக்க ஆர்வமுடையவர்களாக இருந்தாலும் சரி, அல்லது வேடிக்கையாக செய்து பார்க்க விரும்பினாலும் சரி. உங்களுக்காக....
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.