ஓவியம் வரைந்து பழகுங்கள்
உ. தாமரைச்செல்வி
ஓவியம் வரைவது என்பது சாதாரணமான விசயமல்ல. காகிதத்தில் ஓவியம் வரைந்துவிட்டு தேவையில்லாதவற்றை நீக்கவும், நிறங்களை மாற்றவும் கஷ்டப்படுவோம்
இந்தக் குறைகளையெல்லாம் கணினி ஒரளவு குறைத்து விட்டது. கணினியில் ஓவியம் வரைவதற்கு நிறைய மென்பொருட்கள் வந்து விட்டன்.
இணைய வழியில், எளிமையான முறையில் ஓவியம் வரைய ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் ஓவியம் வரைவதற்கான வெள்ளை நிறப் பலகை ஒன்று உள்ளது. இந்தப் பலகையின் இடதுபுறம் நிறம், பென்சில் போன்றவை உள்ளன. இவற்றிலிருந்து சரியான நிறத்தையும், அளவையும் தேர்வு செய்து கொண்டு வரையலாம்.
வரைந்து முடித்த பின்பு இந்தப்படத்தை சேமிக்கவும், மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கவும் அல்லது நீக்கவும் வசதிகள் உள்ளன.
இணையத்தில் வரைந்து பழகுவோம் என விரும்புபவர்களுக்காக....
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.