பிரபலப் பத்திரிகையின் அட்டையில் உங்கள் புகைப்படம்
உ. தாமரைச்செல்வி
பிரபலப் பத்திரிகையில் தங்கள் பெயர் வராதா? என்று எத்தனையோ பேர் எண்ணுகிறார்கள். உங்களுக்கும் கூட இந்த எண்ணம் இருக்கலாம். உங்கள் பெயர் என்ன? உங்கள் புகைப்படத்தையே நீங்கள் விரும்பும் உலகப் புகழ்பெற்ற பத்திரிகையின் அட்டையில் வெளியிடலாம்.
இதற்கும் ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் நீங்கள் விரும்பும் படத்தை உள்ளீடு செய்வதற்கான பொத்தானைச் சொடுக்கி உங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுங்கள். பின்னர் கிழேயுள்ள பத்திரிகையின் வார்ப்புருக்களில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள். அந்தப்பக்கத்திலுள்ள வார்ப்புரு பிடிக்கவில்லையா? அடுத்த பக்கத்திற்குச் செல்லுங்கள். அடுத்தடுத்துள்ள பக்கங்களுக்குச் சென்று உங்களுக்கு மிகவும் பிடித்த வார்ப்புருவைத் தேர்வு செய்யுங்கள்.
தேர்வு செய்த வார்ப்புருவின் மேல் சொடுக்குங்கள். அவ்வளவுதான் உங்கள் புகைப்படம் அந்த பத்திரிகையின் வார்ப்புருவில் இடம் பெற்றுவிடும்.
இந்தப்படத்தை உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளுங்கள் அல்லது மின்னஞ்சலில் உங்கள் நண்பர்களுக்கு/உறவினர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.
உங்கள் படத்தைப் பிரபலப் பத்திரிகையில் இடம் பெறச் செய்ய முடிவு செய்து விட்டீர்களா? உங்களுக்காக...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.