உங்களுக்கு சீனப் பெயர் வேண்டுமா?
உ. தாமரைச்செல்வி
உங்கள் பெயருக்கு இணையாக ஒரு சீனப் பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருக்கிறதா?
இதற்கு ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் இருக்கும் உங்கள் பெயர், குடும்பப் பெயர், பாலினம், உங்கள் பிறந்த தேதி போன்றவைகளை உள்ளீடு செய்யுங்கள். உங்கள் பெயர் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான தேர்வில் ஐந்து வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் கீழுள்ள “பெயரைப் பெறுங்கள்” எனும் பொத்தானில் சொடுக்கினால் போதும். உங்களுக்கு சீனப் பெயர் தயார்!
ஐந்துவகைத் தேர்வுகளில் மாற்று வகைகள் ஒவ்வொன்றாக மாற்றியும் வேறு பெயர்களையும் பெறலாம். இந்தப் பெயர் மாற்றத்தின் போது உங்கள் பிறந்த தேதிக்கான சீன ஆண்டையும் தெரிந்து கொள்ள முடியும்
உங்கள் பெயருக்குப் பொருத்தமான ஒரு சீனப் பெயரை உருவாக்கித்தான் பாருங்களேன்...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.