இரத்தத்தில் கடிதமெழுத வருகிறீர்களா?
உ. தாமரைச்செல்வி
ஒருவர் தனக்கு இணையாக எதிர்பாலரை விரும்பி விட்டால், காதலிக்கத் தொடங்கி விட்டால் அவருக்காக எதையும் செய்யத் துணிந்து விடுகின்றனர். சிலர் தங்கள் கடிதத்தில், தனது இரத்தத்தில் “I Love You" என்று எழுதி அனுப்பி அனுதாபத்தைப் பெற்று காதலைத் தொடங்கவும் விரும்புகின்றனர்.
உங்களுக்கும் அப்படி ஏதாவது ஒரு எண்ணமிருந்தால், இரத்தத்தில் கடிதமெழுத விருப்பமிருந்தால் அதற்கும் ஒரு இணையதளம் உதவுகிறது.
அட, என்ன பயப்படுறீங்க? வாங்க உங்க ஆட்காட்டி விரலை மட்டும் நகர்த்தியில் (Mouse) வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை எழுதுங்கள். உங்கள் ஆட்காட்டி விரலிலிருந்து வழியும் இரத்தத்தில் எழுத்துக்கள் உருவாகிவிடும். அவ்வளவுதான்!
ஒரு துளி இரத்தம் கூட நீங்கள் சிந்த வேண்டாம். இரத்தத்தில் உங்கள் கையெழுத்துடன் கடிதம் தயார். உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு அதை அப்படியே மின்னஞ்சல் செய்யுங்கள்... !
பயப்படாம வாங்க... இரத்தத்திலே எழுதிப் பாருங்க...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.