நிமிடத்திற்கு ஒரு முறை நேரம் காட்டும் புகைப்படம்
உ. தாமரைச்செல்வி
உங்கள் கணினியில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் குறிப்பிட்ட நேரத்தைக் காட்டும் ஒரு புகைப்படம் தெரிந்தால் எப்படியிருக்கும்? மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்.
உங்கள் மகிழ்ச்சிக்காகவே ஒவ்வொரு நிமிடத்திற்கும் குறிப்பிட்ட நேரத்திற்கான ஒரு புகைப்படத்தையும் அந்த நேரத்திற்கான மேலும் சில புகைப்படங்களுக்கான குறிப்புகளையும் இணையதளம் வழங்குகிறது.
இந்த இணையதளத்தின் மேற்பகுதியில் குறிப்பிட்ட நேரத்திற்கான புகைப்படம் தெரிகிறது. இந்தப் புகைப்படத்தின் ஏதாவது ஒரு இடத்தில் குறிப்பிட்ட நேரம் தெரிகிறது. அதன் கீழ் அந்த நேரத்திற்கான புகைப்படங்கள் நகரம், நாடு வாரியாகத் தரப்படுகிறது. இந்தப் பட்டியலிலிருந்தும் நாம் குறிப்பிட்ட புகைப்படத்தைத் தேர்வு செய்து பார்க்க முடியும்.
இதன் கீழ்பகுதியில் உங்கள் கணினிக்கு ஏற்றபடி எண்ணிம வடிவம் (Digital), ஒத்த பொருள் வடிவம் (Analogue), நேர மண்டலம் (Time Zone), நேரக் குறியீடு (Time Notation), நேரத்தின் புகைப்படத்திற்கான இருப்பிடம், புகைப்படத்திற்கான தேர்வு, பின்புற நிறம் போன்றவைகளைத் தேர்வு செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
உங்கள் கணினிக்கு இந்த நேரம் ஒத்து வருமா?ன்னு பாருங்க...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.