உங்களை மாற்றிக் கொள்ள ஆசையா?
உ. தாமரைச்செல்வி
உங்களுக்கு சூப்பர் மேனாக வேண்டும் அல்லது புகழ்பெற்றவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் அல்லது பிறரை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதா?
உங்களுக்கு இயற்கையுடன் இணைந்திருக்க வேண்டும் அல்லது புகழ்பெற்ற சிலருடன் இணைந்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதா?
உங்கள் எண்ணத்தை நிறைவேற்ற ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தின் உதவியுடன் நீங்கள் சூப்பர் மேனாகவோ அல்லது புகழ் பெற்ற ஒருவராகவோ மாறிவிடலாம்.
இயற்கை எழிலுடன் இணைந்து விடலாம் அல்லது புகழ் பெற்றவர்களுடன் இணைந்து விடலாம்.
ஆமாம். உங்கள் புகைப்படத்தை மட்டும் பதிவேற்றி உங்கள் விருப்பத்திற்கேற்றபடி உங்களை மாற்றிக் கொள்ளலாம். இயற்கையுடன் இணைந்து கொள்ளலாம். புகழ் பெற்றவர்களுடன் இணைந்து விடலாம்.
இந்த இணையதளத்தில் இருக்கும் புகைப்பட தாக்கம் (Photo Effect) எனும் இடத்தில் சொடுக்கினால் இயற்கை எழில் மிக்க வார்ப்புருக்கள், புகழ்பெற்ற சிலரது வார்ப்புருக்கள் என பல வார்ப்புருக்கள் இங்கு தரப்பட்டிருக்கின்றன.
இவற்றில் உங்களுக்குப் பிடித்த வார்ப்புருவைத் தேர்வு செய்து சொடுக்க வேண்டும். அதன் பிறகு கணினியில் உள்ள உங்களது புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு அங்குள்ள வார்ப்புருவில் உங்கள் புகைப்படத்தை சரியான அமைப்பிற்கு எளிதாக நகர்த்திக் கொண்டால் நீங்கள் விரும்பிய வார்ப்புருவில் உங்கள் புகைப்படம் இடம் பெற்றுவிடும்.
இந்தப் புகைப்படத்தை கணினியில் சேமித்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் இந்த இணையதளத்தில் இருக்கும் முகத்தாக்கம் (Face Effect) எனும் இடத்தில் சொடுக்கினால் சூப்பர்மேன் மற்றும் பல புகழ்பெற்றவர்களின் மாதிரித் தோற்றங்களுக்கான அமைப்பில் வார்ப்புருக்கள் தரப்பட்டிருக்கின்றன.
இவற்றிலும் நம் புகைப்படத்தைப் பதிவேற்றி நமது புகைப்படத்தைக் காலியாக உள்ள இடத்தில் சரியாகச் சேர்த்து கணினியில் சேமித்துக் கொள்ளலாம்.
மேலும் இத்தளத்தில் உங்கள் புகைப்படத்தை நீங்கள் விரும்பிய சட்டங்களில் அமைத்துக் கொள்ளவும் பல வார்ப்புருக்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த வார்ப்புருக்களில் உங்களுக்குப் பிடித்த சட்டத்தைத் தேர்வு செய்து உங்கள் புகைப்படத்தை அழகாக்கிவிடலாம்.
இதுபோல் புகைப்பட ஒழுங்கு (Trim Photo) எனும் இடத்தில் சொடுக்கினால் புகைப்படத்தை ஒழுங்குபடுத்துவதற்கான பல வார்ப்புருக்கள் இருக்கின்றன.
இதில் சரியான வார்ப்புருவைத் தேர்வு செய்து உங்கள் படத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ளமுடியும்.
என்ன உங்கள் ஒரே புகைப்படத்தை பல வடிவங்களில் மாற்றிப் பார்க்கத் தயாராகி விட்டீர்களா?
அப்படியானால் சரி.... உங்களுக்காக....
இணையதள முகவரி:
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.