கடவுளுடன் பேச விருப்பமா?
உ. தாமரைச்செல்வி
கடவுள் இருக்கிறாரா? அல்லது இல்லையா? என்று நீண்டகாலமாகக் கேள்விப் போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கேள்விப் போராட்டத்திற்கு முடிவுதான் இல்லை. இந்நிலையில் உங்களுக்குக் கடவுளுடன் பேச வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும்?
இணையம் வழியாக நீங்கள் கடவுளுடன் பேச முடியும். அதற்கும் ஒரு இணையதளம் உதவுகிறது.
ஆம். இந்த இணையதளத்தில் நீங்கள் கடவுளுடன் பேச முடியும். இந்த இணையதளத்தில் கடவுளுடன் பேசுவதற்காக ஒரு காலி கட்டம் இருக்கிறது. இந்தக் காலிக்கட்டத்தில் முதலில் உங்கள் பெயருடன் தொடங்கி அடுத்தடுத்து காலிக்கட்டத்தில் கடவுளிடம் கேட்க விரும்புவதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் போதும். அதற்குரிய பதில் கிடைக்கும். இப்படியே உங்கள் கேள்விகளை எப்படி வேண்டுமானாலும் கேட்கமுடியும். அதற்கான பதில்கள் கிடைக்கும். உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் கடவுளிடம் பேசலாம்.
முகநூல் நண்பர்கள்.... வேறு சில சமூகதளங்களின் நண்பர்கள் என பேசி அலுத்துப் போனவர்கள் கடவுளிடம் பேசலாமே..!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.