உங்கள் விருப்பப்படி படம் வரையலாம்!
உ. தாமரைச்செல்வி
உங்கள் எண்ணங்களுக்கேற்றபடி ஒரு சித்திரம் வரைய வேண்டுமா?
இதற்கும் ஒரு இணையதளம் உதவுகிறது.
ஆம். இந்த இணையதளத்தில் இருக்கும் கேள்விக்கேற்ற பதிலைத் தேர்வு செய்யுங்கள். அதன் பிறகு அடுத்து என்று உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள். இப்படியே அதில் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலைத் தேர்வு செய்யுங்கள். கடைசியில் உங்கள் பெயரை விருப்பமிருப்பின் உள்ளீடு செய்யுங்கள். அவ்வளவுதான். உங்கள் எண்ணங்களுக்கேற்ற வண்ணங்களுடன் ஓவியம் தயார்!
இந்தப் படத்தினை நண்பர்களைப் பார்வையிடச் செய்ய அதற்கான இணைய இணைப்பு முகவரி மற்றும் இணையதளங்களில் பிரதி செய்வதற்கான குறியீடுகள் போன்றவையும் கிடைக்கும்.
அப்புறமென்ன? உங்கள் விருப்பப்படி உங்கள் ஓவியத்தை வரைய கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்குங்கள்...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.